என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் ஹாக்கி"
- கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை வீணடித்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
- இந்திய அணி தரப்பில் 2 கோல்களையும் நவ்னித் கவுர் அடித்தார்.
லிம்பர்க்:
இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜெர்மனிக்கு சென்று உள்ளது. அங்கு இரண்டு ஆட்டங்களில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி லிம்பர்க் மைதானத்தில் சீனா உடன் மோதியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணடித்தது. சீனாவின் தடுப்பு அரணை மீறி இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
அதே வேளையில் சீனா அணி கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணி சிறிது நேரத்திலேயே கோல் அடித்து சமநிலைக்கு கொண்டு வந்தது.
அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 45-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து சீனா 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது.
51-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து சீனா 3-2 என்று முன்னிலை பெற்றது. அதுவே வெற்றிக்குரிய கோலாகவும் அமைந்தது. இறுதி நேரத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் சீனாவின் தடுப்பு அரணை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை வீணடித்தது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தரப்பில் 2 கோல்களையும் நவ்னித் கவுர் அடித்தார். இந்திய அணி வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் ஜெர்மனி அணி உடன் மோத உள்ளது.
- இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
- இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .
இறுதிபோட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் கான்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
- இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.
- இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா - கனடா அணிகள் மோதின.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் போட்டி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. இதனால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்