search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கேன்"

    • எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் எதுவும் இல்லை
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து தரம் உயர்த்துவதற்கான பணிகள்

    கன்னியாகுமரி;

    கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் எதுவும் இல்லாமல் ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.பாதி நேரம் மட்டுமே இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் இப்பகுதியில் மக்கள் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபனிடம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையின் அடிப்படையில் கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன், கவுன்சிலர் நீரோடி ஸ்டீபன் மற்றும் ஜெயசிங் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர ஆஸ்பத்திரியாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர். தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து தரம் உயர்த்துவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று கடிதம் மூலம் அரசுத்துறை கூறியுள்ளது.

    • மருத்துவமனைக்கு அைழத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மாணவி 6 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரதாப்பை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென வயிறு வலிப்பதாக கூறினார். இதையடுத்து ஆசிரியைகள், அவரது பெற்றோரை வரவழைத்து மாணவியை அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு அைழத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மாணவி 6 வார கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலம் நிலவாரப்பட்டி தென்றல் நகரை சேர்ந்த பிரதாப் (வயது 21) என்பவர் சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பிரதாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

    ×