என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு"
- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது.
- இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா வருகிற -1 ந் தேதி நடைபெற உள்ளது. இதைெயாட்டி விழாவிற்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பகுதிகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆய்வு செய்தார்.
மேலும் அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் அமைப்பது, பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் இளையராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகள், அதுகுறித்த ஆவணங்களை பார்வையிட்டார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகள், அதுகுறித்த தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக போலீசாரிடம் கேட்டறிந்து வழக்கு விவர ஆவணங்களை பார்வையிட்டார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கைதிகள் அறை, வழக்கு ஆவணங்கள் பாதுகாப்பு, பராமரிப்பு அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட நிலைய போலீசார் உடன் இருந்தனர்.
- காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அதன் படி திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர் போலீஸ் நிலையத்தை சுற்றி பார்வையிட்டு, காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு காவலர்கள் மத்தியில் பேசிய அவர் காவல் துறையினர் பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுமை யாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், காவலர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.மேலும் அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். அதன் பிறகு போலீஸ் நிலையம் வளாகத்தில் 10 தக்கும் மரக்கன்று நட்டு வைத்தார்.இதில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன்,பாக்கியலட்சுமி,தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ்,பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.
- போலீசாருடன் தேசிய பெண் போலீசார் தினம் கொண்டாடப்பட்டது.
கோவை
ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உமா ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக கோவை ெரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவை ெரயில்வே உட்கோட்ட போலீஸ் நிலையங்களான கோவை, போத்தனூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் ஈரோடு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு வழக்குகளின் தற்போதைய நிலைய குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.
பின்னர் ெரயில் நிலையங்களின் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்வது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசாருடன் தேசிய பெண் போலீசார் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் மற்றும் கோவை ரெயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.
- அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டனர்.
- மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி சாலையில் அமைந்துள்ள டி.வி.எஸ்., சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காய்கறி வண்டிகளிலும் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த புகாரையடுத்து அந்த வாகனங்களையும் சோதனையிட்டார்.
சேலம் உட்கோட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவகானந்தன், சப்&இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, முரளி ஆகியோர் நேற்று காவேரிப்பட்டணம் பகுதிகளில் அரிசி ஆலை, மாவு மில்களில் சோதனையிட்டனர். இதில் சவூளூர் கூட்டு ரோடு அருகில் உள்ள ராஜா என்கிற நிப்பட்ராஜா (வயது 50) என்பவருக்கு சொந்தமான மாவுமில்லில் பதுக்கப்பட்டிருந்த, 38 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும், 10 கோதுமை மூட்டைகள் மற்றும், 59 மூட்டையில் இருந்த அரிசி மாவு உள்ளிட்டவைகளை கைப்பற்றி, மில் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். அதேபோல குண்டலப்பட்டியை சேர்ந்த சங்கர் (48) என்பவரது மாவுமில்லில் இருந்த, 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு அவரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்