search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்மயம்"

    • தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது.
    • பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று சந்திரசூட் முன்பு கூறியிருந்தார்.

    அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்திட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையகப்படுத்தி பொது நலனுக்காக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்த மாநில அரசுகளுக்கு  இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(b) (c) அதிகாரமளிக்கிறது. இந்த உரிமையை சட்டப்பிரிவு 31C பாதுகாக்கிறது. தனியார் சொத்துக்களும் இதில் சட்டப்பிரிவில் அடங்கும் என்பதை 1978 இல் வழங்கப்பட உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

    இதை எதிர்த்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு ஒன்று போடப்பட்டது. அதாவது, 1986-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, வீட்டு வசதி திட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. பொது சீரமைப்புக்காக சில குறிப்பிட்ட தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் என்பதே அந்த திருத்தும். இதை எதிர்த்து மும்பையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

    1991 இல் இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் , ஏழைகளுக்கு வீடு வழங்குவது என்பது அரசின் கடமை என்று கூறி அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 1992-ம் ஆண்டு சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இதர பணக்காரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இதுவரை உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த வழக்கானது கடந்த ஏப்ரல் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று நடந்த விசாரணையில், நலனுக்காகவே இருந்தாலும் எல்லா தனியார் சொத்துக்களையும் அந்த சட்டப்பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்கள் கைப்பற்ற முடியாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. சந்திரசூட் உள்ளிட்ட 7 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஆதரித்த நிலையில் அமர்வில் இடம்பெற்ற நீதிபதி சுதான்சு துளியா இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்டார். 

    முன்னதாக கடந்த ஏப்ரலில் நடந்த விசாரணையின்போது , பொது நலனுக்காக தனிநபரின் சொத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என்று தலைமை நீதிபது சந்திரசூட் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

    மக்களவை தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனியார் சொத்துகளான வீடுகள், தங்கம், வாகனங்கள் என அனைத்தையும் அபகரித்து சொத்து மறுபகிர்வு திட்டத்தன்மூலம் மற்றவர்களுக்கு வழங்கிவிடும். பெண்களின் தாலியையும் அவ்வாறு பறிக்கும் என்று காங்கிரஸ் மீது பரபரப்பான விமர்சனத்தை முன்வைத்தார். இதனையொட்டி இந்த 30 ஆண்டுகால பழமையான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின் உற்பத்தியை தனியார்வசம் கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்?
    • அதானிக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக மக்களை வதைக்கிறார்கள் என சீமான் குற்றச்சாட்டு

    சங்கரன்கோவில்:

    அனைத்து துறைகளையும் தனியார் மயப்படுத்துவது என்பது ஒரு பேராபத்தை நோக்கிய பயணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனால் மின் உற்பத்தியை ஏன் தனியார் வசம் கொடுக்கிறீர்கள்? அப்படி கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள்?

    மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.

    மத்திய அரசு ஏன் அழுத்தம் கொடுக்கிறது? ஏனென்றால் தயாரிப்பது அவரது (மோடி) நண்பர் அதானி தயாரிக்கிறார். அவருக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக மக்களை வதைக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் உற்பத்திகூட அரசிடம் இல்லை. எல்லாம் தனியர் மயம் என்பது பேராபத்தை நோக்கிய பயணம். அது மோசமான பொருளாதார கொள்கை. அதுதான் இலங்கையில் நடந்தது. அங்கு இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 நாள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு கிலோ அரிசி 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த நிலைமை நமக்கு வருவதற்கு முன்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    ×