என் மலர்
நீங்கள் தேடியது "பொறியியல் படிப்பு"
- இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
- பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்பு பிரிவில் 9,639 இடங்கள் இருந்த நிலையில் அதில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் முதல் சுற்று ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்26,654 மாணவர்கள் பங்கேற்றார்கள். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை வருகிற 31-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 10 மணிக்குள் வெளியிடப்படும்.
மறுநாள் 2-ந்தேதி மாலை 5-மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதனால் கடந்த ஆண்டை விட அதிகமான இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
- பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.
- மாணவர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடந்து வருகிறது. 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
- குறிப்பாக கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், எலக்ட்ரானிக் பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். 13-ந்தேதி நடக்கும் 3-வது கட்ட கலந்தாய்வில் 1.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், எலக்ட்ரானிக் பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர்.
மைனிங், மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளில் குறைந்த அளவில் மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.
தமிழகம் வந்த மத்திய மந்திரி ஒருவர் கலை அறிவியல் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மற்றொரு பக்கம் மத்திய அரசு ஒரே மாதிரியான உணவு, தேர்வுமுறை, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்க பார்க்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடம் மொத்தம் 2050 உள்ளன. 493 இடங்கள் காலியாக உள்ளன.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தொகுப்பூதியம், அடிப்படையில் 7 ஆண்டு காலம் பணியாற்றி இருந்தால் நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண்களில் 15 மதிப் பெண்கள் வழங்கப்படும்.
அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியது.
- அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 56 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
முதலில் அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியது. அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது.
110 மையங்களில் ஆன்லைன் வழியாக நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சிறந்த கல்லூரிகளில் விருப்பப்பாடப் பிரிவுகளை தேர்வு செய்தனர். இரவு அவர்களுக்கு உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடங்கள் உறுதி செய்யப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் 21 பேரும், முன்னாள் ராணுவத்தின் குடும்பத்தினர் 2 பேரும், விளையாட்டு பிரிவில் 36 பேருக்கும் தேர்வு செய்த கல்லூரிகள் இன்று ஒதுக்கப்பட்டன.
பிற்பகலில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு பொது சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்கிறார்கள். நாளை மாலை 7 மணி வரை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 23-ந்தேதி காலையில் உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்படும். 24-ந்தேதி காலையில் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 25-ந்தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடக்கிறது.
- அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடக்கிறது.
- அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இக்கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த 1.60 லட்சம் மாணவர்-மாணவிகளுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு நாளை முதலில் கலந்தாய்வு நடக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இக்கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.
காலை 10 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்தல் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இரவு 7 மணிக்கு உத்தேசம் ஒதுக்கீடு வழங்கப்படும். 21-ந்தேதி காலையில் கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு கடிதம் வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து 21-ந்தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் 201 மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 967, விளையாட்டு பிரிவு மாணவர்கள் 1,258 பேர் என மொத்தம் 2,426 பேர் பங்கேற்கிறார்கள்.
சிறப்பு பிரிவினருக்கு 22-ந்தேதி இரவு 7 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்வது நிறைவுபெறுகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு உத்தேச ஒதுக்கீடும், 24-ந்தேதி காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு கடிதமும் வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து தொழிற்கல்வி படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் தொழிற்கல்வி பொது மாணவர்களுக்கும் 25-ந் தேதி தொடங்கி 27-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவு கலந்தாய்வும் 25-ந்தேதி காலை 10 மணிக்கு முதல் சுற்று தொடங்கி 27-ந்தேதி மாலை 5 மணிவரை நடக்கிறது. மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் இக்கலந்தாய்வு அக்டோபர் 23-ந்தேதி நிறைவுபெறுகிறது.
கட்ஆப் மதிப்பெண் 200-ல் இருந்து 77.5 வரை மாணவ-மாணவிகள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுகிறார்கள். முதல் சுற்றில் 200 கட்ஆப் மதிப்பெண் தொடங்கி 184.5 வரையில் உள்ள மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது:-
25-ந்தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டு கலந்தாய்வு மட்டுமின்றி பொதுப்பிரிவு கலந்தாய்விலும் கலந்துகொள்ள இந்த ஆண்டு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இரண்டிலும் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்படுவதால் அதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அதற்கான 'லிங்க்' மட்டுமின்றி பொதுப் பிரிவு 'லிங்க்' அனுப்பப்படும். அவர்கள் அதை பயன்படுத்தி விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு கூடுதலாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு 2.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு இணையவழியில் வரும் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கு 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10968 இடங்கள் உள்ளன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் 175 இடங்கள் உள்ளன.
தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உட்பட சிறப்புபிரிவுக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் நடைபெற உள்ளது. அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ம்தேதி முதல் பல சுற்றுகளாக நடக்க உள்ளது. 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
- கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் பேர் வரை கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியாக 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் சேர்க்கை பெறுவதற்காக 22 ஆயிரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் பேர் வரை கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு கட்-அப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்.
ஆனாலும் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொது கலந்தாய்வில் பங்கேற்று விரும்பிய கல்லூரிகளில் சேரலாம். எனவே விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் இடங்கள் கிடைக்கும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில் சமர்பித்தவர்களில் விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே இதுவரை பங்கேற்காத மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் 3 மணி வரை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் வந்து ஆவணங்களை சரிபார்ப்பு பணியை முடித்து கொள்ளலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.