search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுர்ணமி வழிபாடு"

    • பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பவுர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தங்கி அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவிட்டு, இன்று காலையில் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் நேற்று கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்காக இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்துவருவதால் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் நகரில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்தன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித் தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
    • சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன்

    என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறது.

    இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது.

    இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது.

    பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

    சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன.

    கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.

    • ஒன்பது மஞ்சளை மாலையாக்கி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும்.
    • இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர்.

    குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும்

    உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை.

    இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர்.

    அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மாலையாக்கி

    தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும்.

    பின் இந்த மாலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வந்தால்

    குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பிறக்கும்.

    • ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.
    • கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

    வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.

    ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதிகரிக்கும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.

    கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.

    மாசி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.

    பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

    பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்தோ அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.

    • ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
    • அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.

    ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

    எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம்.

    அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.

    மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

    ஐப்பசி பவுர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.

    கார்த்திகை மாத பவுர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், ருத்திராட்ச மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது.

    • ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும்.
    • புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

    ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

    நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.

    ஆவணி பவுர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது.

    புரட்டாசி பவுர்ணமி அன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாள ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும்.

    மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது.

    நைவேத்தியம் - இளநீர்.

    இந்த பூஜையின் பலனாக சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    புரட்டாசி பவுர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

    • ஆனி மாத பவுர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும்.
    • ஆனி மாதப் பவுர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.

    வைகாசியில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய வைகாசி விசாகமும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

    ஆனி மாத பவுர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும்.

    வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    இந்த வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம்.

    ஆனி மாதப் பவுர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.

    ஆடி பவுர்ணமியில் சிவப்பும், மஞ்சளும் கலந்த ஆடை சார்த்தி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வேண்டும்.

    பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அர்ச்சிப்பது சிறப்பானது.

    அன்றைய தினம் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது சிறப்பானதாகும்.

    இந்த பூஜையால் புண்ணிய கதி கிட்டும்.

    ஆடி மாதத்தில் வடநாட்டில் வட சாவித்திரி விரதம், கோபத்ம விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

    • இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும்.
    • இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.

    சித்திரை மாத பவுர்ணமி அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

    மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும்.

    சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பவுர்ணமி என்றால் மிகவும் விசேஷம்.

    வைகாசி பவுர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும், தங்க ஆபரணமும் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு.

    எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபட வேண்டும்.

    இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம்.

    • தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பவுர்ணமி தினம் வரும்.
    • பவுர்ணமி பூஜை பொதுவாக பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது.

    பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது.

    திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

    சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும்,

    ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும்,

    ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும்,

    தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பவுர்ணமி தினம் வரும்.

    ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் வருவதுண்டு.

    • தாலிப் பொட்டு, மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம்.
    • தாலி பொட்டு, மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.

    பெண்களுக்கு முறத்தில் தாலிப்பொட்டு, மூக்குத்தி மற்றும் பொருட்களை முறத்தில் போட்டு கொடுப்பதற்கு முறவாயண தானம் என்று பெயர்.

    மொத்தம் 12 பவுர்ணமிகள் கொடுக்க வேண்டும்.

    கௌரீ முறத்திற்கு போடக்கூடிய சாமான்களை தவிர மூக்கு பொட்டு, தாலிப்பொட்டு, மெட்டி, சவுரி எல்லாம் போட்டு புடவை, ரவிக்கை கொடுத்து முறவாயணம் கொடுக்க வேண்டும்.

    தாலிப் பொட்டு, மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம்.

    ஆகையால் புடவை, ரவிக்கை கொடுத்து முறத்திற்குப் போடும் வழக்கமான சாமான்களை போட்டு மூக்குத்தி,

    தாலி பொட்டு, மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.

    • நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.
    • நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும்.

    ஆடி மாத பவுர்ணமியில் இருந்து ஜேஷ்ட மாத பவுர்ணமி வரை கொடுக்க வேண்டும்.

    வெற்றிலை, பாக்கில் தட்சணை, துளசி தானம் வைத்து அபிஷேகம் செய்வதற்கு உபயோகிக்கும் சங்கு வைத்து கொடுப்பது நல்லது.

    மகாலட்சிமியின் ஸாந்நித்யம் நிறைந்த சங்கு தானமாக கொடுப்பதினால் நமக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் வெற்றி முழக்கம் செய்வது சங்கு என்பதால் அதனால் நமக்கு காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த தானமும் சாதுர் மாத துவாதசிகளில் ஆரம்பித்து 24 துவாதசியும் அல்லது சாதுர்மாத துவாதசிகளில் மட்டும் கொடுக்கலாம்.

    பூஜைக்கு உபபோகப் படுத்தும் எந்த பொருளை தானம் கொடுத்தாலும், அதன் பலன் நமக்கு எப்பிறவிகளிலும் கிடைக்கும்.

    பூஜை செய்யும் பாக்கியமும், அதற்கு தேவையான பகுதி, பொருள் வசதி, ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம்.

    இந்த முக்கியமான கருத்தை மனதில் கொண்டு தான், நம் பெரியவர்கள் தானங்களும், தருமங்களும், நமக்கு உண்டான நியமங்களும், விரத ஆசரணைகளும், பூஜைகளும் தவறாமல் செய்து வந்தார்கள்.

    நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும்.

    ஆகையால் கூடுமானவவை நம்மால் முடிந்த அளவுக்கு தான தருமங்கள், நியதிகள், விரத ஆசரணைகள், பூஜைகள் முதலியவற்றை செய்வது நல்லது. 

    விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

    ஆடி மாதம் சுக்ல பவுர்ணமியிலிருந்து இன்னொரு ஆடி பவுர்ணமி வரை சாதுர் மாத துவாதசிகளில் தேனும் நெய்யும் கொடுப்பது மிகவும் சிறப்பான தானமாகும்.

    தானம் கொடுக்கும் முறை ஒன்று தான்.

    துவாதசிகளில் கொடுப்பதை பவுர்ணமி அன்று கொடுப்பது.

    மொத்தம் 12 பவுர்ணமி நாட்களில் இந்த தானத்தை கொடுத்து முடிக்கலாம்.

    விருப்பமும் வசதியும் உள்ளவர்கள், 13வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.

    ×