என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பயணிகள்"

    • பிரத்யேக உதவி எண் பெண்களால் இயக்கப்படுகிறது.
    • ஆதரவு வழங்குவதற்காக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    மகளிர் உதவி எண் 155370 முழுக்க முழுக்க பெண்களால் 24/7 முறையில் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற பின்க் ஸ்குவாட் என்ற பெண் பாதுகாப்பு பணியாளர்கள் குழு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும், நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்.
    • நடத்துனரின் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

    சென்னை:

    பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் சில இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம். நடத்துனரின் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது... என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

    ×