search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேளிக்கை விருந்து"

    • பின்லாந்து பிரதமரான சன்னா மரீன், உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.
    • சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

    ஹெல்சிங்கி:

    பின்லாந்து நாட்டின் பெண் பிரதமராக பதவி வகித்து வருபவர் சன்னா மரீன் (34). ஆளும் சோவியத் டெமாக்டிரட்டிவ் கட்சியைச் சேர்ந்த இவர் உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.

    சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டில் இவர் ஒரு பத்திரிகைக்கு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி செய்யலாமா என்ற கண்டன குரல்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

    இந்நிலையில், பிரதமர் சன்னா மரீன் அங்குள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மது விருந்தில் அவர் கலந்துகொண்டார். இந்த விருந்தில் அவர் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    இதை பார்த்த பின்லாந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயலில் ஈடுபடுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களிலும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    அங்குள்ள ஊடகங்களிலும் இது தொடர்பாக படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் அவர் விருந்தின்போது போதை பொருளைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் இதனை பிரதமர் சன்னா மரீன் மறுத்துள்ளார். போதை பொருள் சோதனைக்கும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

    ×