என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரி ஜெகன்னாத்"

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
    • இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

    இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

     

     

    இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

     

    விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை தொடர்து அடுத்ததாக பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பூரி ஜெகநாத் இணையத்தில் பதிவுட்டுள்ளார். தபு நடித்து வெளியான க்ரூ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சார்மி.
    • இவர் தயாரிப்பில் வெளியான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சார்மி, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.


    சார்மி

    இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் அதிர்ச்சியான சார்மி சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    லைகர் தோல்விக்கு காரணம் சார்மி என்றும் பூரி ஜெகந்நாத் டைரக்டராக இருந்தாலும் படத்தை சார்மிதான் இயக்கினார் என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பின. மேலும், லைகர் தோல்வியால் அடுத்த படமான ஜனகனமன படத்தை கைவிட்டு விட்டனர் என்றும் தகவல்கள் வெளியானது.


    சார்மி

    இதையடுத்து மீண்டும் இணைய பக்கத்தில் வந்து சார்மி வெளியிட்டுள்ள பதிவில், ''வதந்திகள்.. வதந்திகள்.. வதந்திகள்.. எல்லா வதந்திகளும் பொய்யானவை. பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

    • காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சார்மி.
    • இவருக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத்துக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வலம் வந்தன.

    தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சார்மி, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.

    சமீபகாலமாக சார்மிக்கும், இயக்குனர் பூரி ஜெகன்னாத்துக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வலம் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. இந்த கிசுகிசுக்குள் குறித்து ஐதராபாத்தில் நடந்த பட விழா நிகழ்ச்சியில் பூரிஜெகன்னாத் விளக்கம் அளித்துள்ளார்.

     

    சார்மி - பூரி ஜெகன்னாத்

    சார்மி - பூரி ஜெகன்னாத்

    அவர் பேசும்போது, ''எனக்கு சார்மி பல விஷயங்களில் ஆதரவாக இருக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்கிறோம். 50 வயது பெண்ணுடன் சேர்ந்து படம் தயாரித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகின்றனர். காதல், கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள்தான் நட்புதான் நிரந்தரம். சார்மியை 13 வயதில் இருந்தே எனக்கு தெரியும். 20 ஆண்டுகளாக அவரோடு சேர்ந்து பயணிக்கிறேன். அவர் எனக்கு நல்ல சினேகிதி. எங்கள் இருவர் இடையே எந்த தவறான உறவும் இல்லை" என்றார்.

    ×