என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தவறி விழுந்த வாலிபர் பலி"
- தனது நண்பர் மாதேஸ்வரனுடன் பின்னால் அமர்ந்து கடந்த 13-ந் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- திடீரென பிரேக் போட்டதால் 2 பேரும் சாலையில் தவறி விழுந்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). இவர் தனது நண்பர் மாதேஸ்வரனுடன் பின்னால் அமர்ந்து கடந்த 13-ந் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பிரேக் போட்டதால் 2 பேரும் சாலையில் தவறி விழுந்தனர். இதில் விக்னேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மாதேஸ்வரன் லோசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விக்னேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36).
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் இரவு 7.30 மணியளவில் ஈரோடு-சத்தியமங்கலம் செல்லும் தனியார் பஸ்சில் ஆப்பக்கூடல் பஸ் நிறுத்தத்தில் ஏறி பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
அப்போது ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனே விபத்தில் சிக்கிய சுரேஷை மீட்டு ஆப்பக்கூடல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து சுரேஷின் மனைவி இருசாயி அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்