search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விரிவாக்க பணிகள்"

    • பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
    • தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    காங்கயம்:

    மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை கண்டறிந்து அதனை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் தாராபுரம் மெயின் ரோடு பகுதியான ேபாலீஸ் நிலையம், பஞ்சாயத்து யூனியன், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபாரம் நிறுவனங்கள் பகுதிகளை உள்ளடக்கிய களிமேடு எனும் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறவில்லை. சில காரணங்களை காட்டி காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் பாதசாரிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் உடனடியாக களிமேடு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இல்ைலயெனில் கோரிக்கை நிறைவேறும் வரை காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட 2 முக்கிய இடங்களின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அமைச்சர், மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு களிமேடு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து போட்டோவுடன் மாலைமலரில் செய்தியும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    • லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி திண்டுக்கல், மதுரை, தேனி, பழனி, போடி, ராமேஸ்வரம், சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, ஊட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலை பணியில் சாலையை அகலப்படுத்தும் போது சிறு பாலங்கள், தடுப்புச் சாலைகள் அமை க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் அமைப்பதற்காக ஆங்கா ங்கே குழிகள் தோண்டி வேலை நடைபெற்று வருகிறது.

    பணிகள் விரைவில் முடிக்காமல் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழிகள் தோண்டிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும், தடுப்புகளும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் குழிகளில் விழுந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது, போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பிற்காலங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் இந்த 4 வழிச்சாலை அமை க்கும்பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த சாலையில் சென்டர் மிடியன்கள் அமைக்க ப்பட்டிருந்தது. அவை தற்போது அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சென்டர் மிடியனை அகற்றிய பின்பு புழுதிகள், தூசிகள் கிளம்பி வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்வோரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

    மேலும் உணவகங்கள், பேக்கரி, டீ கடையில், பழக்கடைகள், சாலையோர வியாபாரிகள், காய்கறி கடைகள் அனைத்திலும் தூசிகள் படிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகிறது. மேலும் நெடுஞ்சாலையில் இடிபட்ட கட்டிட கழிவுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு பணிகளை தொடர வேண்டும். மேலும் பாலம் கட்டும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    • சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு திட்டம்
    • சென்னை கோட்ட பொறியாளர் ஆய்வு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், அருகே மழையூர்- தெள்ளார், சாலையில் உள்ளகுன்னகம்பூண்டி - வெடால், கூட்ரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு, மற்றும் விபத்து தடுப்பு, திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.

    இதை சென்னை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) விசாலாட்சி, வரைபடத்தை வைத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    உடன் செய்யாறு கோட்டபொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜகணபதி, வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ்உல்லா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×