என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் தொழிலாளர்கள்"

    • பிரதிநிதிகள் கண்களில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு.
    • 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    தாம்பரம்:

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் போடப்படவில்லை. வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

    இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 15-வது ஊதிய ஒப்பந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சங்க பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடராஜன், சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    இன்றும் நாளையும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதால் நாளை 73 தொழிற்சங்கங்கள் நடைபெற உள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர்.

    வெளிப்படைத்தன்மை இல்லாமல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கண்கட்டி வித்தை காட்டுவதாக, தெரிவித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    • தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 1.20 லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாதமே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • புதிய சம்பள விகிதம் கணக்கிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடந்தது.

    அப்போது தொழிற்சங்கங்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இறுதி கட்ட பேச்சுவார்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கையெழுத்திட்டனர்.

    4 ஆண்டு காலத்திற்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு பலன் ரூ.1000 ஆக வழங்கப்படுகிறது. மகளிர் இலவச பேருந்தில் ஏற்படும் வருவாய் குறைவினால், டிரைவர், கண்டக்டர்களுக்கு வசூல் படியில் ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்யப்படுகிறது.

    குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    2 வருடமாக நீடித்து வந்த ஊதிய உயர்வு ஒப்பந்த பிரச்சினை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று முன்தினம் இறுதி செய்யப்பட்டதையடுத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தொழிலாளர்களுக்கு பே-மெட்ரிக்ஸ் முறையில் புதிய ஊதிய விகிதம் கணக்கிடப்படுவதால் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அதிகபட்சமாக 7 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 1.20 லட்சம் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இந்த மாதமே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய சம்பள விகிதம் கணக்கிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் அவரவர் பணிக்காலத்தையொட்டி மாறுபடும். ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக சலுகைகள் கிடைக்க உள்ளன.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் மாத சம்பளம் உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    8 அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு ஊழியர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

    ×