என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எழும்பூர் கண் மருத்துவமனை"
- கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு கண்ணில் அரிப்பு ஏற்படும்.
- குழந்தைகளுக்கு கண் வலி ஏற்பட்டால் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் பருவ கால மாற்றத்தால் 'மெட்ராஸ்-ஐ' என்ற கண் வலி வேகமாக பரவி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
இதையடுத்து எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ்-ஐ நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்படுகிறது. திங்கள் கிழமை முதல் இந்த வார்டு செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண் நோய் ஏற்பட்டவர்களுக்கு கண்ணில் அரிப்பு ஏற்படும். கண்ணில் இருந்து வெளியேறும் ஒரு வகை திரவத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பரவும். ஆரம்பத்தில் நாள்தோறும் 50 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இப்போது அது மேலும் அதிகரித்துள்ளது.
கண் நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் வைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு கண் வலி ஏற்பட்டால் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க கண் நோய் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த வழி. வெளியே செல்லும்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மூக்கு கண்ணாடிகளை அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- தற்போதுள்ள மருத்துவமனைக் கட்டிடம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- புதிய கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகளுடன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கருவிழி சிகிச்சை பிரிவு, கண்குழி சிகிச்சை பிரிவு, விழித்திரை சிகிச்சை பிரிவு, உள் கருவிழி சிகிச்சை பிரிவு மற்றும் கண் நரம்பு இயல் மாற்றுக்கண் சிகிச்சை பிரிவு போன்ற சிறப்பு கண் சிகிச்சைக்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை, 1918-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
தற்போதுள்ள மருத்துவமனைக் கட்டிடம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகளுடன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கருவிழி சிகிச்சை பிரிவு, கண்குழி சிகிச்சை பிரிவு, விழித்திரை சிகிச்சை பிரிவு, உள் கருவிழி சிகிச்சை பிரிவு மற்றும் கண் நரம்பு இயல் மாற்றுக்கண் சிகிச்சை பிரிவு போன்ற சிறப்பு கண் சிகிச்சைக்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சார்பில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான டெலி கோபால்ட் இயந்திரம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 5.73 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீவிர மூளைக் காய்ச்சல் நோய்க்கான ஆய்வகம் மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 7.75 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 18 மின்தூக்கிகள்;
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூர் வளாகத்தில் உள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக பயிற்சி மையக் கட்டிடம், ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது மற்றும் 3-வது தளத்தில் துணை செவிலியர் பயிற்சி பள்ளிக் கட்டிடம், திருவாரூர் மாவட்டம், ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல பயிற்சி மையக் கட்டிடம்;
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்டம்- கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பூர் மாவட்டம் - உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய 7 அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 9 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகங்கள் மருந்து கட்டுப்பாடு துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மேலக்குயில்குடியில் 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த மருந்து பரிசோதனை ஆய்வகம், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் மற்றும் நடமாடும் குழு அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 129 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவத்துறைக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் இடமாற்றத்தை எளிதாக்கும் வகையில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்ட்ரெச்சருடன் கூடிய பேட்டரி கார்கள், 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு குறைப் பிரசவ இறப்பைக் குறைக்க 15 கோடி ரூபாய் மதிப்பிலான 150 பிறந்த குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கு 49 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய உயர்நிலை வண்ண அல்ட்ரா சவுண்ட் இயந்திரங்கள் என மொத்தம் 65 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவச் சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பொது சுகாதாரத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 76 மருந்தாளுநர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 திறன்மிகு உதவியாளர் நிலை-II மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் கருணை அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர், ஒரு ஊர்தி ஓட்டுநர், என மொத்தம் 236 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்