என் மலர்
நீங்கள் தேடியது "ரகுல் பிரீத் சிங்"
- சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார்.
- பட்டாசு வெடிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் என எனது தந்தை கூறினார்.
தமிழில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருந்தார்.
அவர் கூறும்போது 'சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்றார். அவர் சொன்னது சரி என்று தோன்றியது. அன்று முதல் இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை'' என்றார்.
இந்த பேச்சு வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் ரகுல் பிரீத் சிங்கை சாடி வசைபாடி வருகிறார்கள்.
விலை உயர்ந்த ஆடை அணிகிறீர்களே, சாதாரண உடை அணிந்து பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்வீர்களா? நீங்கள் விலை உயர்ந்த உணவு சாப்பிடாமல் சாதாரண உணவை சாப்பிடலாம் இல்லையா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.
- இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அஜய் தேவ்கன் நடிக்கும் தி தி ப்யார் தி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சம்பவத்தை பற்றி பதிவிட்டு இருந்தார் அதில் அவர் " நான் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஜிம்மில் 80 கிலோ எடையை வைத்து டெட் லிஃப்ட் செய்தேன். அதை தூக்கும் பொழுது எனது கீழ் முதுகு தண்டில் சிரிய வலி ஏற்ப்பட்டது ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் அதை தூக்கினேன் அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. உடற்பயிற்சி முடித்த பிறகு நேராக ஷூட்டிங்கிற்கு சென்றேன். அன்று மாலை எனக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது என்னால் குணிந்து என் உடையைக்கூட அணிய முடியவில்லை. தசை பிடிப்பு தானே சரியாகிவிடும் என இருந்தேன். ஆனால் அக்டோபர் 10 ஆம் தேதி என் பிறந்தநாள் பார்ட்டிக்கு ரெடியாகி கொண்டிருக்கும் பொழுது திடீர் என் இடுப்பின் கீழ் உள்ள பகுதி என்னை விட்டு பிரிந்தது போல ஒரு உணர்வு. நான் மயங்கினேன். 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். நான் இன்னும் பூர்ண குணமடையவில்லை. நாட்கள் கடக்க கடக்க அது சரியாகிவிடும்" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.
- இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.

இந்தியன் 2
பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்
இந்நிலையில், 'இந்தியன்-2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளதாகவும் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.