search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னா ஹசாரே"

    • அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்
    • ஒரு காலத்தில் என்னோடு சேர்ந்து மதுவுக்கு எதிராக செயல்பட ஒருவர் இப்போது மதுபான கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறார்

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அன்னா ஹசாரே கடந்த 2011 ஆம் தொடங்கிய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் ஆவார். இவரது இயக்கத்தில் இணைத்து போராட்டங்களில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அதன்பின்னர் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கி டெல்லியில் ஆட்சியை பிடித்தார்.''

    இந்நிலையில் தற்போது அரசியல் சுழலில் சிக்கித் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். டில்லி மதுபான கோள்களை வழக்கில் 6 மாதமாக திகார் சிறையிலிருந்த கெஜ்ரிவால் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள அவர் டெல்லிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சூழலில் தற்போது அன்னா ஹசாரே கூறியதாவது, அரசியலில் நுழைய வேண்டாம் என்று ஆரம்பத்திலிருந்தே கெஜ்ரிவாலை நான் எவ்வளவோ தடவை எச்சரித்தேன். சமூக சேவை செய்வதில்தான் உண்மையான திருப்தி உள்ளது என்று கூறினேன்.ஆனால் அவர் நான் சொல்வதைக் கேட்கவில்லை. எனது அறிவுரையைக் கருத்தில் கொள்ள கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். இப்போது அவருக்கு என்ன நடந்துள்ளதோ அது தவிர்க்க முடியாதது. கெஜ்ரிவால் மனதில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

    முன்னதாக கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேட்டில் கைதானபோது பேசியிருந்த அன்னா ஹசாரே, நான் கெஜ்ரிவால் மீது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன். ஒரு காலத்தில் என்னோடு சேர்ந்து மதுவுக்கு எதிராக செயல்பட ஒருவர் இப்போது மதுபான கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து அனைவரது பார்வையையும் பெற்றவர் அன்னா ஹசாரே.
    • லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் என்றால் மிகையாகாது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பா.ஜனதா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சபை ஒன்று. மற்றொரு மேல்சபை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டசபையில் ஏற்கனவே லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் நேற்று மேல்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டே சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக போராடியவருமான அன்னா ஹசாராவை போன் மூலம் தொடர்பு கொண்டு, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    லோக் ஆயுக்தா வரம்பிற்குள் முதலமைச்சர் மற்றும் மந்திரிகள் அடங்குவர். லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவரை நியமித்தபின் அவரை மாற்றவோ இடமாற்றமோ செய்ய முடியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் நீக்க முடியும்.

    அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் குறித்த புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

    மத்திய அரசு லோக் ஆயுக்தா மசோதாவை அமல்படுத்த அன்னா ஹசாரே நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியை இழக்க இவரது போராட்டம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், இவருடன் உண்ணாவிரதம் இருந்து கெஜ்ரிவால் தனியாக சென்று கட்சி ஆரம்பித்து டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

    • அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.
    • சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்- மந்திரியுமான மணிஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவாகி இருந்தது. அவரது வங்கி லாக்கரையும் சி.பி.ஐ. நேற்று சோதனை செய்தது.

    டெல்லி அரசியலில் சி.பி.ஐ. சோதனை, விசாரணை, சிறப்பு சட்டசபை கூட்டம் என்ற பரபரப்புக்கு இடையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆரம்ப காலத்தில் தன்னை பின் பற்றி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    அதிகார போதையில் இருப்பதாக அவர் 2 பக்கங்களுக்கு கெஜ்ரிவாலை விமர்சித்து கடிதம் எழுதியுள்ளார்.

    இதற்கு டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கிடைக்காததால் அன்னா ஹசாரேவை பா.ஜனதா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதாவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

    ஆனாலும் மக்கள் பாஜகாவை நம்பவில்லை. பிரபலமான ஒருவரை வைத்து தனி நபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் பொதுவானது தான். பா.ஜனதாவும் தற்போது அன்னா ஹசாரேயை வைத்து அதைத்தான் செய்கிறது.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    • டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
    • அதில் லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

    நீங்கள் முதல் மந்திரியான பிறகு நான் உங்களுக்கு முதல்முறையாக கடிதம் எழுதுகிறேன். அதற்கு காரணம், அண்மையில் வெளியான டெல்லி மதுபான கொள்கை பற்றிய செய்திகள். டெல்லி அரசிடம் இருந்து இப்படியொரு கொள்கையை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல் மந்திரியான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டசபையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டுவர முயற்சி செய்யவில்லை. இப்போது, உங்களின் அரசு மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும், உங்களின் வார்த்தைகளும், செயல்பாடுகளும் வெவ்வேறு என்பதைக் காட்ட.

    மகாராஷ்டிராவில் மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது.

    ஆனால், இன்று டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று, அதனால் ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலை முடுக்கு எல்லாம் மதுபான கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இதுவெல்லாம் அழகா. நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    ×