என் மலர்
இந்தியா

நான் சொன்னதை கெஜ்ரிவால் கேட்கவில்லை - ஆம் ஆத்மி தோல்வி குறித்து பேசிய அன்னா ஹசாரே

- பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
- கெஜ்ரிவால் பண பலத்தால் மூழ்கிவிட்டார் என்று அன்னா ஹசாரே தெரிவித்தார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
தற்போதுவரை பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் தோல்வி குறித்து பேசிய அன்னா ஹசாரே, "ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். இந்த குணங்கள் தான் வாக்காளர்களை அவர் மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். நான் இதை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சொன்னேன், ஆனால் அவர் அதை காதில் வாங்கவில்லை, கடைசியாக, அவர் மதுபானத்தில் கவனம் செலுத்தினார். ஏன் இந்தப் பிரச்சினை எழுந்தது? பண பலத்தால் அவர் மூழ்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.