search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் உயிரிழப்பு"

    • அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார்.
    • மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் (மேற்கு) பகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ராஜூபால். இவர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் தேர்தலில் அவரிடம் தோல்வி அடைந்த அஸ்ரப் என்பவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப்பின் அண்ணனும், பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான அதிக்அகமது கைது செய்யப்பட்டார். அவர் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அதிக் அகமது 5 உயர்ரக நாய்களை உத்தரபிரதேசத்தில் சாக்கியா பகுதியில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் ஒரு நாய் பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வாடியுள்ளது. இந்நிலையில் பசி மற்றும் தாகத்தால் அந்த நாய் இறந்தது. இதே போல மற்ற 4 நாய்களும் உணவு கிடைக்காமல் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

    • மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கன்றுக்குட்டியும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடை கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஹரீஷ். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதுதவிர தனது வீட்டில் மாடுகளும் வளர்த்து வருகிறார். மாடுகளை தினமும் அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    நேற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, மாலையில், மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    பின்னர் கொட்டகையில் மாடுகளை கட்டி விட்டு வீட்டிற்குள் சென்றார்.இந்த நிலையில் சிறிது நேரத்தில் கொட்டகையில் இருந்து கன்றுக்குட்டி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியான அவர் கொட்டகைக்கு வந்து பார்த்தார்.

    அப்போது அங்கு கன்றுக்குட்டி யும், வளர்ப்பு நாயும் உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்த அவர் சோகமானார். உடனடியாக சம்பவம் குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டது, மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டியும், நாயும் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.பின்னர் உயிரிழந்த கன்றுக் குட்டி மற்றும் வளர்ப்பு நாய் உடல் மீட்கப்பட்டு அதே பகுதி யில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    ×