search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைப்பட விருதுகள்"

    • 2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது
    • சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்கு அனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்.

    2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (IIFA) விழா அபு அதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 [வெள்ளிக்கிழமை] தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் [செப்டம்பர் 29] நிறைவடைகிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி,

    ➽சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

    ➽சிறந்த படமான ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல் 'படம் தேர்வாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்கி இருந்தார்.

     

    ➽சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

    ➽சிறந்த இயக்குநராக '12த் பெயில்' படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

    ➽சிறந்த துணை நடிகராக 'அனிமல்' படத்தில் நடித்த அனில் கபூர் தேர்வாகியுள்ளார்

    ➽சிறந்த துணை நடிகையாக ''ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படத்திற்காக மூத்த நடிகை ஷபானா அஸ்மி தேர்வாகியுள்ளார்

    ➽சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்குஅனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்

    ➽'ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படம் சிறந்த கதைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது

    ➽சிறந்த தழுவல் [உண்மை சம்பவத்திலிருந்து] கதை விருதுக்கு '12த் பெயில்' தேர்வாகியுள்ளது

    ➽சிறந்த இசைக்காக அனிமல் படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஆவார்.

    ➽சிறந்த பாடல் வரிகள் விருதுக்கு அனிமல் படத்தில் பாடல் எழுதிய சித்தார்த் கரிமா மற்றும் சத்ரங்கா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .

    மூன்றாம் நாள் நிகழ்வாக இன்று (செப்.29) ஹனி சிங், ஷில்பா ராவ் மற்றும் ஷங்கர்-எஹ்சான்-லாய் உள்ளிட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா.
    • சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே).

    தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டு திரைப்பட விருது பெறும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வருமாறு:-

    சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா, சிறப்பு பரிசு- இறுதிச்சுற்று, பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - 36 வயதினிலே.

    சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு- கவுதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), வில்லன் நடிகர்- அரவிந்த்சாமி (தனி ஒருவன்), நகைச்சுவை நடிகர்- சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),

    சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (ஆபூர்வ மகான்), குணச்சித்திர நடிகை- கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்- மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர்- ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்), சிறந்த பாடலாசிரியர்- விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணி பாடகர்- கானா பாலா (வை ராஜா வை), பின்னணி பாடகி- கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்).

    சிறந்த ஒலிப்பதிவாளர்- ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஸ்வரன் (தாக்க, தாக்க), சிறந்த எடிட்டர்- கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சண்டை பயிற்சியாளர்- ரமேஷ் (உத்தம வில்லன்), நடன ஆசிரியர்- பிருந்தா (தனி ஒருவன்), ஒப்பனை கலைஞர்- சபரி கிரீஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று), தையல் கலைஞர்- வாசுகி பாஸ்கர் (மாயா),

    சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிஷேஸ், வைஷ்ணவி (பசங்க-2), சிறந்த பின்னணி குரல் (ஆண்) - கவுதம் குமார் (36 வயதினிலே), (பெண்)- ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). இதே போன்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2014-15-ம் ஆண்டுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலை, அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசின் திரைப்பட விருதுகள் 160 பேருக்கு வழங்கப்பட்டது.
    • சின்னத்திரை விருதுகள் 81 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

    இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்தநெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

    தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

    மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75 லட்சம் மதிப்புள்ள காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ×