என் மலர்
நீங்கள் தேடியது "ரெஜினா கசாண்ட்ரா"
- நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
- இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.

ரெஜினா கசாண்ட்ரா
இதையடுத்து நடிகை ரெஜினா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்." என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ரெஜினா - சந்தீப் கிஷன்
இந்த பதிவிற்கு 'இருவருக்கும் எப்போது கல்யாணம்' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா 'மாநகரம்' திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happpyyyy Birthdayyyy Papa…
— Sundeep MICHAEL Kishan (@sundeepkishan) December 13, 2022
Love you and Wishing you only the best of everything,always ♥️
Stay Happy..Stay Blessed ♥️@ReginaCassandra pic.twitter.com/pZGd9d5ibn
- நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கண்டநாள் முதல், மாநகரம், கசட தபற, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் நான் சினிமாவில் நடிக்க வந்த போது பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார்.

முதலில் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது. அப்போது எனக்கு 20 வயது தான். சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கலாம். இன்னும் சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள் என்று கூறினார்.
- மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
- இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக திரிஷா மற்றும் அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடந்து வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால் அஜித் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி விடாமுயற்சி படப்பிடிப்பு பற்றி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கடந்த வாரம் அஜர் பைஜானில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பில் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து கார் சேசிங் காட்சிகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்த காட்சியில் அஜித் ஓட்டி வந்த கார் அந்தரத்தில் பறப்பது போல் மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அடுத்த கட்டமாக நேற்று மாலை விடாமுயற்சி படத்தில் அஜித் முதல் தோற்றம் வெளியானது. இதில் அஜர்பைஜான் சாலையில் தனியாக பையுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி நடந்து வரும் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாக விருந்தாக அமைந்துள்ளது.
அஜர் பைஜானில் சில நாட்களும், பின்னர் இறுதியாக இந்தியாவில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். தற்போது அஜர்பைஜானில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தில் திரிஷாவும், அஜித்தும் கணவன்-மனைவியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரண்டாம் கட்டப்பிடிப்பில் ஜூலை 5-க்கும் மேல் படக்குழுவினருடன் இணையுள்ளார் திரிஷா. படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடாமுயற்சி படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்
- படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது. படத்தை குறித்து அடுத்தடுத்து புதிய போஸ்டர்கள் படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் படக்குழு தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் ரெஜினா கசாண்ட்ரா, அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
- விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்து வரும் இந்த படத்திற்கான அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு படத்தின் போஸ்டர்களும் மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டனர்.
அந்தவகையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ரெஜினா கசான்ட்ரா விடாமுயற்சி படத்தின் சில அப்டேட்களை கூறினார் அதில் " திரைப்படம் மிகவும் அழகாகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு முன் நான் அஜித் சாரை சந்தித்ததில்லை. எல்லோரும் அவரை பார்க்க வேண்டும். அவரைப் போல் வசீகரமான நபரை என் வாழ்வில் பார்த்ததில்லை. திரைப்படம் மிகச் சரியான நேரத்தில் வெளிவரும். இயக்குனர் மகிழ்திருமேனி சிறப்பாக இயக்கியுள்ளார். 90 சதவீத திரைப்படம் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளது. என்னுடைய கதாப்பாத்திரத்தை திரைப்படத்தில் ஆர்வமாக உள்ளேன்" என கூறியுள்ளார்.
விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மும்பையில்தான் தங்க வேண்டும்.
- இந்தி தெரியாத தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கவும் இந்தி திரையுலகினர் ஆர்வம் காட்டுவது இல்லை.
தமிழில் 'அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜ தந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியில் நடிக்க செல்லும் தென்னிந்திய நடிகைகள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக ரெஜினா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தென்னிந்தியாவில் இருந்து இந்தி திரையுலகுக்கு செல்லும் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
இந்தி தெரியாத தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கவும் இந்தி திரையுலகினர் ஆர்வம் காட்டுவது இல்லை. இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மும்பையில்தான் தங்க வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இதனை கடைப்பிடிப்பது முக்கியம். ஆனால் தென்னிந்திய திரையுலகில் அப்படி இல்லை. மற்ற மொழி திரையுலகை ஒப்பிடும்போது, இந்தி சினிமா துறையில் போட்டிகளும் அதிகம்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரெஜினா கசாண்ட்ரா.
- இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.

ரெஜினா கசாண்ட்ரா
ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், "2020-ல் எனது காதல் முறிந்துபோனது. அதில் இருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியாது. ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன்" என்றார்.

#kasadatabaramotionposterhttps://t.co/cw6I4bGwU6 Super thrilled to b part of dis “one of a kind” project💛🔥6 music dirs, 6 cinematographers , 6 Editors & wonderful co-stars💛😍 Tnx to @vp_offl bro & @chimbu_deven sir for this opportunity💛🙏🏻Somethin new to watch out for😁 pic.twitter.com/dNAgakREaT
— Shanthnu Buddy (@imKBRshanthnu) May 25, 2019


Hey #partypeople out there!! #party has been certified with a U/A!! Da bars are will be opening real soon in a theatre near u @Amma_Creations@TSivaAmma@Premgiamaren@actorshiva@Cinemainmygenes@Actor_Jai@iSanchitaa@ReginaCassandra@moulistic@nivethaPethurai@vasukibhaskarpic.twitter.com/mabrtqp0V3
— venkat prabhu (@vp_offl) December 10, 2018
