என் மலர்
நீங்கள் தேடியது "கவுதம் வாசுதேவ் மேனன்"
- ஆர்யா தற்போது முத்தையா இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' நடித்து வருகிறார்.
- தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஆர்யா தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த போஸ்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நடிகர் ஆர்யா கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy to Unveil the impressive first look poster of #KatherBashaEndraMuthuramalingam.
— Gauthamvasudevmenon (@menongautham) December 10, 2022
Best wishes to the entire team.#KEMthemovie@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @venkatraj11989 @veeramani_art @ActionAnlarasu pic.twitter.com/V4PKigiJkb
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet).
- இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது.
- கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
- இப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

வெந்து தணிந்தது காடு
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.

வெந்து தணிந்தது காடு
இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மல்லிப்பூ' பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு
இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
- இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

வேட்டையாடு விளையாடு போஸ்டர்
வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது. சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் துவங்க திட்டமிட்டுள்ளதாக கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. நேற்று வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் கமலிடம் கூறியுள்ளேன், அவருக்குப் பிடித்திருந்தது. துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்குப் பின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளில் கவுதம் வாசுதேவ் மேனன் ஈடுபட்டுள்ளார்.
- தனது அடுத்த படம் குறித்த புதிய தகவலை கவுதம் மேனன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளுக்காக அவர் மும்பை சென்றிருக்கிறார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதன்படி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- 2019ம் ஆண்டில் ஜோஸ்வா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
- பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா இமை போல் காக்க பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த திரைப்படம் வரும் பிப்ரவிர மாதம் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியாகியுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
- ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "ஜோஷ்வா- இமை போல் காக்க" பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.
இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் மார்ச் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கடந்த வாரம், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியானது.
இந்நிலையில், ஜோஷ்வா- இமை போல் காக்க திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீஸ் ஆனது.
- ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது.
- ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார்
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் துருவ நட்சத்திரம். நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன் , ராதிகா, சிம்ரன் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு இப்படத்தின் பேச்சு வார்த்தை நடந்து 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு வேலைகளை துவங்கினர். முதலில் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

ஜான் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது. விக்ரம் 'பேஸ்மண்ட்' என அவருக்கென் ஒரு தனி அதிரடிப் படையை வைத்துள்ளார். அந்த படையை வைத்து தீவிரவாதி கும்பல்களை ரகசியமாக தாக்குகிறார் அரசாங்கத்திற்கு தெரியாமல் என்பதே கதைக்களம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்துக் கொண்டு இருக்கும் வேலையில் கோவிட் 19 வந்ததால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. 2023 ஆண்டு நவம்பர் மாதம் படத்தை வெளியிடத்திட்டமிட்டனர் ஆனால் படத்தை அந்த தேதியில் வெளியிட முடியவில்லை. நீடித்த நிதி மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, படம் வெளிவராமல் உள்ளது.

இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் படக்குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகிறது.
இம்முறையாவது படம் வெளியாகும் என ரசிகர்கள் மிக எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏப்ரல் 28 சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா. முதன்முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவரது முன்னாள் கணவனான நாக சைத்தன்யாவுடன் இணைந்து 'யே மாயா சேசாவே' என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சில நாட்களுக்கு முன் அவர் கலந்துக் கொண்ட 'எல்லே சஸ்டெயினபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் அவர் கருப்பு நிற கவுனை அணிந்திருந்தார். அவரது திருமண கவுனை மறு ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறத்தில் மாற்றி அணிந்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
ஏப்ரல் 28 { இன்று} சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலமான சமந்தா, சின்மயி , விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.