என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லியோனார்டோ டிகாப்ரியோ"

    • கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது
    • இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது

    ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனதிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளைக்கு 'ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுக்கு தான் தற்போது நடிகரின் பெயர் சூட்டப்பட்டது

    புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.

    இவை கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உள்ளவை . இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் நாயகனும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வளம் வருபவருமான லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்டவர்.

    சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு 'லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை'யை நிறுவினார்.

    ஈக்வடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த இவரது அறக்கட்டளை குரல் கொடுத்தது. எனவே அவரது முயற்சிகளை கவுரவிக்கும் வகையில் தவளைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

    'ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    • 'டைட்டானிக்' படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் லியோனார்டோ டிகாப்ரியோ.
    • இவர் தற்போது தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்' படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிராக உயர்ந்தவர் லியோனார்டோ டிகாப்ரியோ. தொடர்ந்து ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

    லியோனார்டோ டிகாப்ரியோ - ஜிகி

    லியோனார்டோ டிகாப்ரியோ - ஜிகி

     

    ஹாலிவுட்டில் நிறைய இளம்பெண்களுடன் லியோனார்டோ கிசுகிசுக்கப்பட்டு காதல் மன்னனாகவும் வலம் வந்தார். 47 வயதான டிகாப்ரியோ கடந்த 4 ஆண்டுகளாக தன்னைவிட 22 வயது குறைவான நடிகை கமிலா மோரோனை காதலித்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

     

    ஜிகி - லியோனார்டோ டிகாப்ரியோ

    ஜிகி - லியோனார்டோ டிகாப்ரியோ

    இவர்களின் வயது வித்தியாசத்தை காரணமாக வைத்து பல விமர்சனங்களும் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று லியோனார்டோ பதில் அளித்திருந்தார். சமீபத்தில் இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

     

    லியோனார்டோ டிகாப்ரியோ - ஜிகி

    லியோனார்டோ டிகாப்ரியோ - ஜிகி

    இந்நிலையில் புதிதாக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 27 வயது மாடல் அழகி ஜிகிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஹாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. மீண்டும் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை லியோனார்டோ காதலிப்பது ஹாலிவுட்டில் பரபரப்பாகி உள்ளது.

    ×