search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்"

    • 500 போலீசார் குவிப்பு
    • எந்த பொருட்களும் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடு

    வேலூர்:

    வேலூரில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. சலவன் பேட்டையில் உள்ள ஆனை குலத்தம்மன் கோவிலில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை 3 மாநில சேவா தள அமைப்பாளர் பத்மகுமார் தொடங்கி வைக்கிறார்.

    ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ஊர்வலம் ரெட்டியப்பா முதலி தெரு, கண் ஆஸ்பத்திரி, திருப்பதி தேவஸ்தானம் வழியாக வந்து அண்ணா கலையரங்கத்தில் நிறைவடைகிறது.

    மாலை 6 மணிக்கு மேல் பொது கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை யொட்டி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊர்வலம் நடைபெறும் பாதை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும். மற்றபடி எந்த பொருட்களும் தங்களுடன் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
    • திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் தடை செய்யக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆகையால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து போலீசார் 2 பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
    • இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வரும் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, வரும் 28-ம் தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×