என் மலர்
நீங்கள் தேடியது "கத்ரினா கைப்"
- கத்ரினா கைப் தற்போது விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார்.
- தற்போது இவர் குழந்தைகளுடன் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைப். இவர் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கத்ரினா, மதுரையில் பள்ளிக்குழந்தைகள் சிலருடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

நடனமாடிய கத்ரினா கைப்
மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்குவதற்காக, இந்தியாவின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டு மதுரையில் மவுண்டன் வியூ பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியை கத்ரினா கைபின் தாயார் சுசானே நீண்ட காலமாக அவரின் அறக்கட்டளை மூலமாக நடத்தி வருகிறார். சுசானே இந்த பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

நடனமாடிய கத்ரினா கைப்
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கத்ரினா கைப் சமீபத்தில் பங்கேற்று, குழந்தைகளுடன் நடனமாடியிருக்கிறார். அவர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி குழந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.