search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்"

    • இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜாவா பைக் 18 வகை வேரியண்ட்களில் கிடைக்கிறது,

    இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 1.98 lakh லட்சதிக்ரு (Ex-Showroom) விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கு முந்தைய ஜாவா பைக்குகளை விட இந்த மேம்படுத்தப்பட்ட ஜாவா பைக்கின் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய வகை ஜே-பேந்தர் எஞ்சின் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 294 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமா 27.32 பிஎஸ் மற்றும் 26.84 என்எம் டார்க் வரை சக்தியை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் அதிக இரைச்சலை ஏற்படுத்தாது என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஜாவா நிறுவனத்தின் புதிய 42 பாபர் மாடல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ஜாவா 42 பாபர் மாடல் மூன்று வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜாவா 42 பாபர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2 லட்சத்து 06 ஆயிரத்து 500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பாபர் மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை அதன் நிறத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    விலை விவரங்கள்:

    மிஸ்டிக் காப்பர் ரூ. 2 லட்சத்து 06 ஆயிரத்து 500

    மூன்ஸ்டோன் வைட் ரூ. 2 லட்சத்து 07 ஆயிரத்து 500

    ஜாஸ்பர் ரெட் (டூயல் டோன்) ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்து 187

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய ஜாவா 42 பாபர் மாடலில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், கிளாக் கன்சோல், புதிய ஹேண்டில்பார், பார்-எண்ட் மிரர்கள், புதிய வடிவம் கொண்ட பியூவல் டேன்க், டேன்க் பேட்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சாப்டு ஃபெண்டர்கள், லோ-சிங்கில் சீட் மற்றும் அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் 334சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 30.2 ஹெச்பி பவர், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு ஸ்விட்ச் கியர், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை புதிய ஜாவா 42 பாபர் மாடலில் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் மற்றும் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ×