search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவேனில் வாலறிவன்"

    • உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
    • இதில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    பிரசிலியா:

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

    பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
    • தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    • கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்குவங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், கர்நாடக வீராங்கனை திலோத்தமாவை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

    இதில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்கு வங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.

    ×