search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய விளையாட்டு போட்டிகள்"

    • விளையாட்டிற்கான இடஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் சேரமுடியும்.
    • தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 6-ந்தேதி ஆரம்பித்து 12-ந்தேதி முடிவடைய உள்ளது. இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 190 புள்ளிகளும், வெள்ளிப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 160 புள்ளிகளும், வெண்கலப் பதக்கம் பெறும் மாணவர்களுக்கு 130 புள்ளிகளும், பங்குபெற்ற மாணவர்களுக்கு 50 புள்ளிகளும் வழங்கப்படும். இதன்மூலம், விளையாட்டிற்கான இடஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளில் சேரமுடியும்.

    ஆனால் இந்த ஆண்டு மாணவர்களின் பட்டியலை தமிழக அரசு அனுப்பவில்லை. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.

    இதில் உள்ள உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலை அனுப்புமாறு அகில இந்திய மாணவர் விளையாட்டு அமைப்பு எழுதிய கடிதத்தையும், அந்தக் கடிதம் யாருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். இதுபோன்ற தவறு இனி வருங்காலங்களில் நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நீண்ட நாட்களாக பஸ் நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அங்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

    ஒரு கோடியே இருபது லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்து உள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் மதன்மோகன், பணிகள் நிலைக்குழு தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • 2014-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 8 ஆண்டு காலத்திற்கு பிறகு முறியடித்தார்.
    • தமிழக வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ், 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. 8 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்த சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டிய தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளிப்பதக்கமும், 3.90 மீட்டர் உயரம் தாண்டிய பாரனிகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 


    ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தூத்துக்குடியை சேர்ந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் (தகுதி இலக்கு 8.25 மீட்டர்) தகுதி பெற்றார். 

    ×