search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றில் மூழ்கி பலி"

    • ரஷியாவில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் இறந்தனர்.
    • மேலும் ஒரு மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மாஸ்கோ:

    ரஷியாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவர்களது உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷிய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

    விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்களும் ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். அவர்களைப் பிரிந்துள்ள குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம். பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால் சுழல் மற்றும் பாறையின் இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சாதாரண நாட்களை விட கோடை விடுமுறை காலத்தில் தான் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிகிறது.

    இதனால் ஒகேனக்கல் பகுதியில் மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே காட்சி அளித்தன. தற்போது பள்ளிகள் திறப்பு நாட்கள் தள்ளி போனதால் வருகிற 11-ந் தேதி வரை கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆலம்பாடி பரிசல் துறை, ஊட்டலை பரிசல் துறை, முதலைப்பண்ணை, நாகர்கோயில், கோத்திக் நாகர்கோயில், கோத்திக்கல் பரிசல்துறை, மாமரத்துகடவு உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை மீறி, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தண்ணீரை கண்டதும் ஆசையில் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர்.

    இதனால் ஆழமான பகுதி மற்றும் சுழல், பாறை இடுக்கில் சிக்கி உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த வாரம் பென்னாகரம் மருக்கலாம்பட்டியை சேர்ந்த தந்தை மகன் 2 பேரும் ஒகேனக்கல் ஆலம்பாடி காவேரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

    கடந்த மாதம் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சாமுண்டீஸ்வரி லே-அவுட் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சிவப்பா (37), நண்பர்களுடன் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தபோது அவர் ஆழமான பகுதியில் சென்று ஆற்றில் மூழ்கி இறந்தார்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சந்திரசேகரன் (36) என்பவரும் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தார்.

    வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நபர்கள் நீரில் மூழ்கி உயிரை இழக்கும் அபாயம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரங்கேறி வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 31 பேர் இதுவரை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.

    உயிர் பலியை தடுக்க, மாவட்ட நிர்வாகம் குளிக்க தடைவிதிக்கப்பட்ட இடங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என 6 மொழிகளில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிவிப்பு பலகையில், அபாயகரமான கூர்மையான வழுக்கும் பாறைகள் மிகுந்த பகுதியாகும். அதிக உயிரிழப்பு ஏற்படக்கூடிய பகுதி.

    இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி குளித்தால், போலீசாரால் தண்டிக்கப்படுவீர்கள் என அந்த அறிவிப்பு பலகையில் உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்வதால் சுழல் மற்றும் பாறையின் இடுக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

    கடந்த 5 மாதத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த உயிரிழப்பை தடுக்க ஆபத்தான முக்கிய இடங்களில் தமிழ் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 6 மொழிகளில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    ரோந்து பணியில் போலீசார் கூடுதலாக ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

    • புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார்.
    • பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கரட்டாங்காடு அடுத்துள்ள அன்னாசி கடை வீதியை சேர்ந்தவர் செல்வம். தறி பட்டறை தொழிலாளி.

    இவரது மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

    கடந்த 3 நாட்களாக புவனேஷ் மற்றும் அவரது தந்தை செல்வம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் காலை நேரத்தில் குளித்து வந்தனர்.

    அதேபோல் இன்று காலை 8 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது குளித்து கொண்டிருத்த போது புவனேஷ் திடீரென ஆழமான பகுதி சென்றார். பின்னர் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார்.

    இது குறித்து மொடக்கு–றிச்சி தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி மாணவர் புவனேஷ் உடலைதேடினர்.

    பின்னர் புவனேஷ் உடலை மீட்டு மொடக்குறிச்சி போலீ–சாரிடம் ஒப்படைத்தனர்.

    தந்தை கண் முன்பே மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
    • தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்தனர்.

    பின்னர் மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரவீன்ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் ஆகிய 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×