search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றுமை"

    • சந்திராயன்-3 நிலாவில் சாதனை தேச ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
    • மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியா அனுப்பிய சந்திராயன்-3, நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. இதுவரை நிலவின் தென்பகுதியில் யாரும் ஆய்வு செய்யாத நிலையில் நமது சந்திராயன் முதன் முறையாக அங்கு கால்தடம் பதித்து இருப்பது உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளன.

    நமது நாடு பல மொழி, பல இனம், பல மதம் என இருந்தாலும் தேசம் என்று வரும் போது அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். அதற்கு எடுத்து காட்டாக, சந்திராயன் நிலவில் தரையிறங்கும் காட்சியை கோடான கோடி மக்கள் நேற்று நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். சந்திராயன் வெற்றியை அனைவரும் கொண்டாடினர். இந்த வெற்றி, நமது தேசத்தின் ஒற்றுமையை உலக்கு பிரதிபலித்து இருக்கிறது. இந்த ஒற்றுமை நமக்கு மண்ணிலும், விண்ணிலும் நிச்சயம் வெற்றியை பெற்று தரும்.

    அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி சந்திராயன் வெற்றிக்கு பாடுப்பட்டவர்களை வாழ்த்தி இருக்கிறார். அவரது வழியில் மதுரை மக்கள் சார்பாக நானும் சந்திராயன் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி களை மனதார பாரட்டு கிறேன்.

    இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு தமிழரான திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் இருப்பது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமையான விஷயம். எனவே அவரையும், அவரது குடும்பத்தினரையும் இந்த தருணத்தில் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த திட்டத்திற்கு ஊக்கம் தந்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கு எனது நன்றியை தேரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
    • மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 74-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பொது மேலாளர் பாலமுருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசுகையில், ஜாதி, மதம், மொழி என்ற எந்த பாகுபாடின்றி நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார்.

    இதில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு உடல் பரிசோதனை நேற்று தொடங்கி வருகிற பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • கார்த்திகை தீபத்தின் போது இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தீபம் ஏற்றுவது ஆண்டாண்டு கால வழக்கம்.
    • மதங்களை கடந்து மனித குல ஒற்றுமையே மேன்மையானது என்பதை கிராம மக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே உணர்த்தி உள்ளனர்‌.

    அனுப்பர்பாளையம் : 

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெரிய காணூர் கிராமம் உள்ளது.இங்குள்ள குளத்தின் கரையில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் தர்கா ஒன்று உள்ளது.இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள இந்து,இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வருவது பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒரு வழக்கமாக உள்ளது.

    திப்பு சுல்தான் ஆட்சியின்போது கட்டப்பட்டு,பின் அந்த தர்கா சேதமடைந்ததால் இக்கிராம மக்களே தற்போதுள்ள தர்காவை கட்ட இஸ்லாமிய மக்களுக்கு உதவியும் செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கார்த்திகை தீபத் திருநாளின் போதும் தங்கள் இல்லங்களில் தீபமேற்றிய பின் தர்காவுக்கு சென்று அங்கு தீபம் ஏற்றினர். இதனை ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

    இது குறித்து தீபம் ஏற்றிய கிராம மக்கள் கூறுகையில், திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் காணூர் தர்காவுக்கு வந்து செல்கின்றனர்.

    கார்த்திகை தீபத்தின் போது இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தீபம் ஏற்றுவது ஆண்டாண்டு கால வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தர்காவில் தீபம் ஏற்றியதாக கிராம மக்கள் கூறினர்.

    மேலும் இந்த ஆண்டும் காணூர் குளத்தில் தண்ணீர் நிரம்ப வேண்டும் என குளக்கரையிலும் தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். மதங்களின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அதன் மூலம் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு வரும் சூழலில் பல ஆண்டுகளாக கிராம மக்கள் இஸ்லாமியர்களின் தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகின்றனர்‌.

    இது மதங்களை கடந்து மனித குல ஒற்றுமையே மேன்மையானது என்பதை கிராம மக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே உணர்த்தி உள்ளனர்‌. 

    • உலக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம்.
    • உணவு, குடிநீர், இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    இரண்டாம் உலகப்போருக்கு பின்பு கடந்த 1945 ஆம் ஆண்டு உலக தொழிற்சங்க அமைப்பு பாரீஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டது.

    நாடுகளை அடிமைப்படுத்தி, அந்த நாட்டு வளங்களையும் சுரண்டி, மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிராக, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலக நாடுகளின் முழுமையில் இருந்தும் தொழிலாளர்களை, மக்களை பாதுகாக்க வேண்டி உலகத் தொழிற்சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

    அதன் அமைப்பு தினம் தஞ்சாவூரில் கடைபிடிக்கப்பட்டது.

    அனைத்து தொழிற்ச ங்கங்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    மாநில செயலாளர் சந்திரகுமார் , தொ.மு.ச மாவட்ட செயலாளர் சேவியர், ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ. ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர், இருப்பிடம், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும், உலகத் தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

    இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் துரை. மதிவாணன், ரவி, கோவிந்தராஜ், சேவையா, தாமரைச் செல்வன், ராஜா கோபால், வீரையன், செல்வம், மணிவாசகன், பாரதிதாசன், மருதவாணன், ராஜு , பன்னீர்செல்வம், சுரேந்தர், சிவானந்தம், செல்வம், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×