என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏர்பாட்ஸ்"
- ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை அதிகப்படுத்தி வருகிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்த சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்களை எட்டியது.
ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளரான ஜெபில் இன்க், இந்தியாவில் ஏர்பாட்ஸ் பாகங்களை உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிருந்து ஏர்பாட்ஸ்-க்கான பிளாஸ்டிக் பாடி அல்லது மூடிகளை சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
ஏர்பாட்ஸ் பாகங்கள் உற்பத்தி குறித்து ஆப்பிள் மற்றும் ஜபில் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவன சாதனங்களின் இந்திய உற்பத்தி 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. "ஆப்பிள், மற்றும் ஓர் வெற்றிக்கதை. அவர்களின் இந்திய உற்பத்தி ஏற்கனவே 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. நான் தவறாக கூறவில்லை எனில், அவர்கள் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் சமீபத்திய சாதனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்." என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்யும் சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 141 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் ஏர்பாட்ஸ் மாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- புது ஏர்பாட்ஸ் மாடல் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஏர்பாட்ஸ் அடுத்த ஆண்டு தான் அப்டேட் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் அடுத்த தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல் 2024 இரண்டாவது அரையாண்டு அல்லது 2025 முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஏர்பாட்ஸ் மாடல் அப்டேட் செய்யப்படாது என்றே அர்த்தமாகும். மேலும் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் லைட் மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல்களின் வெளியீடு பற்றி மிங் சி கியோ தகவல் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த தகவல்கள் ஏர்கனவே ஜெஃப் பு வெளியிட்ட தகவல்களை போன்றே இருக்கிறது. இருவரும் புது ஏர்பாட்ஸ் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து இருந்தனர்.
குறைந்த விலை ஏர்பாட்ஸ் மாடல் 99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 065 என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல் மூன்று ஆண்டுகளுக்கு பின் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக டிசம்பர் 2020 வாக்கில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனங்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிரிவில் போட்டி தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஆப்பிள் தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இடைவெளியை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என்றே கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி ஆப்பிள் தனது மிக்சட்-ரியாலிட்டி ஹெட்செட்-ஐ இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவிலும் மேற்கொண்டு வருகிறது.
- சமீபத்திய ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியும் இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவில் இருந்து மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், ஐபோன் உற்பத்தி சீனா மட்டுமின்றி இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் மற்றும் பீட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பீட்ஸ் ஹெட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் உற்பத்தியையும் இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. சீன உற்பத்தியாளரான லக்ஸ்ஷேர் பிரெசிஷன் இண்டஸ்ட்ரி இந்தியாவில் ஏர்பாட்ஸ் உற்பத்தியை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் பீட்ஸ் ஹெட்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக லக்ஸ்ஷேர் நிறுவனம் ஏர்பாட்ஸ் உற்பத்தியை வியட்நாமில் மேற்கொள்ள இருக்கிறது. அதன் பின் மெல்ல இந்தியாவிலும் ஏர்பாட்ஸ் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. இந்த நிறுவனம் சீனாவில் இருந்து தனது உற்பத்தி ஆலையை மெல்ல மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளை துவங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களின் உற்பத்திக்காக சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை மெல்ல மாற்றிக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே சீனாவை அடுத்து இந்தியா, மெக்சிகோ மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்