search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு விழா"

    • ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
    • ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர்.

    சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதரி தர்கா உள்ளது. இங்கு அனைத்து சமூக மக்களும் மத வேறுபாடு இன்றி வழிபடுவது வழக்கம்.

    இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது காரில் வந்து இருந்தார். தர்காவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.

     அப்போது ஏ.ஆர்.ரகுமானை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். ரோட்டிலும் திரண்டு நின்றனர். ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முண்டியடித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் வந்த காரை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கியது.
    • பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் மராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

    இந்த நிலையில் தர்காவில் நடைபெற்று வரும் மராமத்து பணிகள் குறித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தர்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கும், யாத்திரிகர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என நாகூர் தர்கா நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாகூர் ஆண்டவருக்கு மலர் போர்வை வழங்கி மலர் தூவி துவா செய்தார்.

    மேலும் தர்காவில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:-

    தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு என தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவி களை செய்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்ட ஹஜ் யாத்திரை தமிழக முதலமைச்சர் முயற்சியால் மீண்டும் தமிழகத்தில் இருந்து தற்போது தொடங்கப்ப ட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு விழாவிற்கு சந்தன மரக்கட்டைகள் தமிழக அரசு சார்பில் விலை இல்லாமல் வழங்கப்படுவதாகவும், இதே போல் ஏர்வாடி தர்காவிற்கும் விலை இல்லாமல் சந்தன கட்டைகள் வழங்க நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாகூர் ஆண்டவர் தர்கா வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் புதிய யானை வாங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய யானை வாங்க தமிழக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி தர்கா சந்தனக்கூடு விழா தொடங்கியது.
    • இந்த விழாவில் மும்மதத்தினர் கலந்து கொள்கின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். புதூர் ஒன்றியம் அருகே உள்ள கரிசல்பட்டியில் ஹஜரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா மதநல்லி ணக்க விழாவாக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 873-வது சந்தனக்கூடு விழா நேற்று தொடங்கியது.

    இதை முன்னிட்டு கரிசல்பட்டி அருகில் உள்ள கே.புதுப்பட்டி, கரியாம் பட்டி, வலசைப்பட்டி இந்துக்களும் உள்ளூர் முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து ஊரின் மையப்பகுதியில் உள்ள மச்சி வீட்டு அம்மா தர்ஹாவிற்கு வந்தனர். அங்கிருந்து கொடி யேற்றத்திற்கான கொடி யினை அலங்கரிக்கப்பட்ட நாட்டிய வெள்ளை குதிரையின் மேல் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    ஊர்வலம் ஹஜ்ரத் பீர்சுல்தான் வலியுல்லாஹ் தர்கா வந்தடைந்த பின் கொடி தர்ஹா உள்ளே கொண்டு செல்லப்பட்டு சிறப்பு துவா செய்த பின்னர் தர்ஹா முன்பு உள்ள கொடிமரத்தில் 10 அடி நீளமுள்ள பிரமாண்டமான கொடி ஏற்றப்பட்டது.

    கொடியேற்றத்தின்போது வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கொடி ஏற்றத்தினை தொடர்ந்து இன்றிலிந்து 10-வது நாளில் சந்தனம் பூசும் சந்தனக் கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் பங்கேற்பர்.கொடியேற்றத்தை தொடர்ந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க நாட்டிய குதிரையின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

    • சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சகன்வலி தர்கா பள்ளிவாசலில் இறைநேசர் ஹஜ்ரத் சகன்ஷா அவுலியாவின் உரூஸ் என்கிற 178-வது சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தாவத் விருந்து மற்றும் தப்ரூக் பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் பரமத்திவேலூர் தர்கா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் தர்கா பள்ளிவாசலை வந்தடைந்தது. காலை நடைபெற்ற மீலாது விழா வில், இஸ்லாமிய பெண்கள் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.முன்னதாக பள்ளிவாசலில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும், பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×