என் மலர்
நீங்கள் தேடியது "மோட்டோ மொரினி"
- மோட்டோ மொரினி நிறுவனத்தின் புதிய 650 சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- இந்திய சந்தையில் புதிய 650சிசி பைக் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மோட்டோ மொரினி நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்-கேப் 650 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டோ மொரினி எக்ஸ்-கேப் 650 விலை ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் ஸ்டாண்டர்டு மற்றும் எக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
மோட்டோ மொரினி எக்ஸ்-கேப் 650 எக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எக்ஸ்-கேப் 650 மாடல் அட்வென்ச்சர் டூரர் போன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட்கள், டிரான்ஸ்பேரண்ட் வைசர் என மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்போர்ட் பைக் போன்றே காட்சியளிக்கிறது.

இதன் பின்புறம் சிறிய டெயில் ரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ மொரினி எக்ஸ்-கேப் 650 மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு இன்லைன் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 60 ஹெச்பி பவர், 54 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ மொரினி எக்ஸ்-கேப் 650 மாடலில் எல்இடி இலுமினேஷன், 7 இன்ச் டிஎப்டி கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடிங் மோட்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் யுஎஸ்டி முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் இரு 298 எம்எம் டிஸ்க், பின்புறம் ஒற்றை 255 எம்எம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய மோட்டோ மொரினி எக்ஸ்-கேப் 650 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் ஸ்மோகி ஆந்த்ரசைட், கரரா வைட் மற்றும் ரெட் பேஷன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 650, கவாசகி வெர்சிஸ் 650, சுசுகி வி ஸ்டாம் 650 XT மற்றும் சிஎப் மோட்டோ 650 MT போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.