என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி சான்றிதழ்"

    • 14 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி மருத்துவர்கள் இணைந்து மருத்துவமனை தொடங்க முயற்சித்த நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் குஜராத்தில் போலியாக டாக்டர் பட்டப்படிப்பு சான்று பெற்று மருத்துவம் பார்த்து வந்த 14 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சூரத்தில் போலி டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக சென்ற புகாரின் பேரில் 3 கிளீனிக்குகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ வாரியம் (பி.இ.எச்.எம்.) மருத்துவ படிப்புக்கான பட்டப்படிப்பு சான்றிதழ் மூலம் 3 பேர் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    குஜராத்தில் இதுபோன்ற ஒரு படிப்பு இல்லாத நிலையில் இந்த 3 பேரும் போலியாக டாக்டர் பட்டப்படிப்புக்கான சான்றிதழை ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் குஜராத்தை சேர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் முக்கியமானவராக செயல்பட்டுள்ளார். அவர் 5 பேரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்து, எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைப்பது எப்படி? என பயிற்சி அளித்ததும் தெரியவந்தது.

    அவருடன் மேலும் ஒரு டாக்டரும் சேர்ந்து போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழ்களை விற்பனை செய்து வந்துள்ளனர். எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்தவித கட்டுப்பாடு மற்றும் விதிகள் இல்லை என்பதை அறிந்து கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக தனியாக ஹோமியோபதி போர்டு ஒன்றை தொடங்கி அதன் மூலம் போலி சான்றிதழ்களை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு விநியோகம் செய்து வந்துள்ளனர்.

    இந்த கும்பல் பணத்தை பெற்றுக்கொண்டு 15 நாட்களில் மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை கொடுத்ததும் தெரியவந்தது.


    பிடிபட்டவர்களின் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு நூற்றுக்கணக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த மோசடிக்காக அவர்கள் தனியாக ஒரு இணையதளமும் தொடங்கி உள்ளனர். அதில் பட்டப்படிப்பு சான்றிதழ் பெற 1200 பேர் வரை பதிவு செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை செய்த போலீசார் போலி டாக்டர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர்.

    • கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன.
    • சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடந்த 2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகமாக ஆட்கள் எடுக்கப்பட்டன. அப்போது சிலர் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அமலாக்க இயக்குனரகத்தின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அந்த காலக்கட்டத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆவணங்கள் பெறப்பட்டன.

    அதன்படி 12 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இவர்களில் 8 பேர் டிரைவர்கள், 2 பேர் உதவி பொறியாளர்கள், மேலும் கண்டக்டர்கள் உள்பட 2 பேரும் இதில் அடங்குவர்.

    இதையடுத்து அவர்கள் 12 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

    ×