என் மலர்
நீங்கள் தேடியது "மாதம்பட்டி ரங்கராஜ்"
- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி
- குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வரவுள்ளார்.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
Cooku with Comali 5 ?? | Coming Soon | Launch Promo | #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty pic.twitter.com/gUuUmFoe6z
— Vijay Television (@vijaytelevision) March 18, 2024
- மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
- இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் யோகி பாபு ஒருவர். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரஜினிகாந்தை கலாய்த்தும், கிண்டல் செய்தும் மக்கள் மனதை கவர்ந்திருப்பார்.
யோகி பாபுவிற்கு பலப்படங்கள் லைன் அப்பில் இருந்தாலும். அதில் ஒன்று அவர் நடித்து வெளிவரப் போகும் படம் "மிஸ் மேகி." இதில் அவர் வயதான பெண்மணி வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார். இவர் செல்வராகவன் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி படக்குழுவினர் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை.
- புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.
சின்னதிரையில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராகா வாரந்தோரும் மகிழ்விக்கவும் மிக நகைச்சுவை பாணியில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சி. கடந்த 4 சீசன்களும் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில் தற்பொழுது புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக சீசன் 5 வரும் ஏப்ரல் 27 முதல் தொடங்க உள்ளது.
இதற்குமுன் இந்நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் தொடரவில்லை. அவருக்கு பதில் சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்கிறார். மற்றொரு நடுவராக தாமு இருக்கிறார்.
இந்த சீசனில் குக்காக - யூடியூபர் இர்பான்,வசந்த் வசி, நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா, நடிகை ஷாலின் சோயா, நடிகர் அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பாடகியான பூஜா வெங்கட் இதில் பங்கேற்க உள்ளனர்.
கோமாளியாக புகழ், ராமர், சுனிதா, வினோத், சரத், திவாகர் மற்றும் சிலர் இதில் பங்கேற்கவுள்ளனர். மற்ற சீசங்களைப் போலவே இந்த சீசனும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.
- இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நீண்ட காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இடையில், உணவுத் துறையில் தனி கவனம் செலுத்தி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நீதிபதியாக இணைந்தார்.
இந்த நிலையில், மாதம்பட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடித்துள்ளார். "மிஸ் மேகி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் யோகி பாபு, ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் லதா ஆர். மணியரசு இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
- தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, திரைப்படத்துறையில் உள்ள பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.
அப்படிப்பட்ட ஒரு படம்தான் 'மெஹந்தி சர்க்கஸ்'. அதன் கதை, வசீகரமான காதல், நடிகர்களின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் காரணமாக இன்றும் பலருக்குப் பிடித்த படமாக இருக்கிறது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குநர் ராஜூ சரவணன் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கூட்டணி இன்னொரு அழுத்தமான கதைக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படம் பாலக்கோடு, தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகளின் அழகான நிலப்பரப்புகளிலும் மற்றும் தருமபுரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியிட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றது.
- இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதைத்தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது வென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார்.

சீனுராமசாமி
இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது. இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ்
அந்த வகையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.