என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண்டலம்"
- ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
- கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பு.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, 5, 6, 8, 9, மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் 2024 ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 5ல் உள்ள புரசைவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ லைன் அமைப்பதற்கான இணைப்பு பணிகளால், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல், புரசைவாக்கம், பெரியமேட், சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம், கொண்டித்தோப்பு, ஓட்டேரி ஆகிய இடங்களில் சப்ளை நிறுத்தப்படும்.
மண்டலம் 6ல் அயனாவரம், செம்பியம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், மண்டலம் 8ல் கெல்லிஸ், மண்டலம் 9ல் திருவல்லிக்கேணி, மண்டலம் 10ல் உள்ள தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்கள் போதிய குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், அவசர தேவைகளுக்கு நீர் விநியோகம் செய்ய https://cmwssb.tn.gov.in என்ற மெட்ரோ வாட்டர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு முகவரியை பதிவு செய்து கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு வழக்கம் போல் குடிநீர் தடையின்றி தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
- பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் நடந்த ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண வரவேற்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசும்போது, மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரை காமராஜ் திறந்து வைத்துள்ளார்.
காவிரி டெல்டா விவசாயி களின் கோரிக்கைகள் அனைத்தையும் தான் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
இது போல் அவர் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.
காமராஜ் மீது எடப்பாடி பழனிச்சாமி அன்பும் பாசமும் அதிகம் கொண்டவர் என்றார்.
- காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது.
- அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், பிரான்ஸ் நாட்டின் மொன்பொலியெப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜூலியன்ஜின் மலார்டு ஆடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமர்பித்தனர்.
பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டியில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறார்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்க இயலாது. அரசின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு 10 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது என்றார்.
- மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 18-ந் தேதி நடக்கிறது.
- 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயா், ஆணையாளா் தலைமையில் நடைபெறும்.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளா்களிடமும் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனா்.
மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல 1-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயா், ஆணையாளா் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆனையூர், பார்க்டவுண், நாகனாகுளம், அய்யா் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகா், பரசுராம்பட்டி, லூர்து நகா், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவா் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகா், கூடல்நகா், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகா், வண்டியூர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வாி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்