என் மலர்
நீங்கள் தேடியது "மாணவி சாதனை"
- மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- மாவட்ட அளவில் ஓவிய போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரம், கணக்க நாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுடலைக்கனி-சத்யா தம்பதியர். சுடலைக்கனி பாவூர்சத்தி ரத்தில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு நந்திதா என்ற மகளும், அத்திரி சித்தாத் என்ற மகனும் உள்ளனர். நந்திதா பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
3-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஓவிய போட்டிகளில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளதோடு எண்ணற்ற சான்றிதழ்களையும் வாங்கி குவித்துள்ளார்.
இவர் 1,330 திருக்குறள் வரிகளால் பென்சில் மூலம் திருவள்ளுவரின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அதற்கு பார்டராக 133 அதிகாரங்களையும் எழுதி தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் காண்பித்து பாராட்டினை பெற்றார்.
மேலும் சட்ட மேதை அம்பேத்கார் படத்தினை அவர் இயற்றிய சட்டங்களை கொண்டு பென்சிலால் புதிய முயற்சியாக வரைந்து கொண்டிருக்கிறார்.
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகளில் சாதனை படைத்தது மட்டு மல்லாது மாநில அளவிலான போட்டிகளிலும் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் மாணவி நந்திதா கூறினார்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார் ஹேமஸ்ரீ
- சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீயை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த பிரபு - வினோதினி தம்பதியரின் மகள் பி.ஹேமஸ்ரீ (வயது 7). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில், மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் ஹேமஸ்ரீ, பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில், ஒரு நிமிடத்தில் 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார்.
இவரது சாதனை, ‛வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீ, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை, நாகராஜகண்டிகை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.