search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 நாட்களில்"

    • சூரியாம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
    • காலை புதிதாக போட்டப்பட்ட இந்த தார் சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சூரியாம்பாளையம் பெரிய தோட்டம் பகுதியில் ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது.

    நேற்று முன்தினம் காலை புதிதாக போட்டப்பட்ட இந்த தார் சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 25-ந் தேதி மாலை சூரியம்பாளையம் பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழைக்கே தாக்குப் பிடிக்காமல் தார் சாலை பெயர்ந்து போயுள்ளது தெரியவந்தது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் பழைய தார் சாலை திடமாகவும் இருந்தது. ஆனால் புதிய தார்சாலை போடுகிறோம் என்ற பெயரில் 2 நாட்களுக்கு கூட தாக்குபிடிக்காத தரமில்லாத சாலை அமைத்து உள்ளனர்.

    பழைய தார் சாலையின் மீது புதிய தார்சாலை அமைக்கும் போது பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன் மீது சிறிய ஜல்லிகளை கொட்டி தார் கலவைகளை மட்டும் போட்டு சாலை அமைத்து விடுகின்றனர். இதனால் தார் சாலைகள் தரமற்றதாக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குடியிருப்புகளில் வீடுகளில் 2 சாரைப்பாம்புகளை பிடித்தார்.
    • பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக பாம்புகள் படையெடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

    இன்று காலை ஈரோடு ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பழைய பொருட்கள் வைக்க ப்பட்டிருந்த பகுதியில் சுமார் 8 அடி நீளம் உள்ள சார பாம்பு இருந்ததை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார்.

    இதேபோல் ஈரோடு ெரயில்வே காலனி பகுதி யில் உள்ள குடியிருப்புகளில் 2 வீடுகளில் 8 முதல் 10 அடி உயரம் உள்ள 2 சாரைப்பாம்புகளை அவர் பிடித்தார்.

    ஈரோடு இந்தியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் யுவராஜ் சென்று பாம்பை தேடி தேடினார்.

    அப்போது அங்கு டி.வி.யில் சாரை ப்பாம்பு ஒளிந்து கொண்டிருப்பதை கண்டு பிடித்தார். இவ்வாறாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 நாட்களில் 10-க்கும் மே ற்பட்ட பாம்புகளை அவர் பிடித்துள்ளார்.

    பின்னர் அனைத்து பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.

    தற்போது வெ யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான இடங்களை நோக்கி பாம்புகள் வருவதால் வீடுகளை நோக்கி வருகிறது என்றும், பொதுமக்கள் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், காலனி வைக்கும் இடம், பழைய பொருட்கள் வைக்கும் இடத்தை கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

    • ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
    • வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேரும் மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இவ்வாறு மாநகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 டன் வரை குப்பைகள் சேருகின்றன. இவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் கடந்த 24 மற்றும் 25ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் மாநகர் பகுதியில் பட்டாசு கழிவுகள் மலை போல் குவிந்தன.

    இந்த பட்டாசு குப்பை கழிவுகளை அகற்ற நான்கு மண்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வழக்கமான நாட்களில் 70 டன் வரை குப்பைகள் சேரும் நிலையில் இந்த 2 நாட்களில் மட்டும் 190 டன் வரை குப்பைகள் சேர்ந்துள்ளன. அதனை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி உள்ளனர்.

    ×