search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை அரசு"

    • வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
    • மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
    • புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.

    இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.

    ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.

    ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
    • சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவ மனையில் நீரழிவு நோய்க்கான சிறப்பு வெளிப்புற சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இதை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, கண்காணிப்பாளர் செவ்வேள், துணை இயக்குனர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுவையில் பெருகிவரும் நீரழிவுநோயை கட்டுப்படுத்தவும், இருதயநோய், நரம்பியல் நோய்கள், பக்கவாதம், சிறுநீரக செயலிழிப்பு தடுக்கவும், நீரழிவு நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் இந்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இதை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சர்க்கரை வியாதி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. புதுவையில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வு கூறியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு தனிப்பிரிவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கென தனிப்பிரிவு தொடங்கப்படும். புதுவை சுகாதாரத்துறையை மேம்படுத்த தேவையான கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் தரையில் பாயில் படுப்பதாக ஒரு தகவல் வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தேன்.

    அப்போது அதிகாரிகள், நாங்கள் யாரையும் படுக்கை இல்லை என திருப்பி அனுப்புவதில்லை. படுக்கை கொள்ளளவை விட அதிக நோயாளிகள் வருகின்றனர் என தெரிவித்தனர். வரும் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மக்கள் அதிக நேரம் காத்திருக்கக் கூடாது. தேவையான கருவிகள் வாங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

    தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மாநில மாணவர்கள் உரிமைகள் பறிக்கப்படாது என்பதில் சந்தேகமில்லை. எந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது? என முழு விபரத்தை கேட்டுள்ளேன். நீட் அமுல்படுத்தப்பட்ட போதும் இடஒதுக்கீடு பறிபோகும் என குற்றம் சாட்டினர்.

    ஸ்மார்ட்சிட்டி திட்டம் வெளிப்படையாக நடக்கிறது. கடந்த ஆட்சியில் தாமதமாக நடந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பே பணிகள் முடிந்திருக்க வேண்டும். எங்களின் முயற்சியில் தற்போது அடுத்த ஆண்டு வரை ஸ்மார்ட் சிட்டி திட்ட காலத்தை நீட்டித்துள்ளோம்.

    இத்திட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி வழிமுறைகள், நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளோம். காலதாமதம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு விரைவாக பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. லஞ்சம், ஊழலை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நானே விசாரணைக்கு உத்தரவிடுவேன். தற்போது வரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் எந்த குறைபாடும் இன்றி நடந்து வருகிறது.

    அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடைத்துவிடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    எதிர்கட்சித் தலைவர் சிவா மாணவர் சேர்க்கை ரத்துக்கு அரசு பொறுப் பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டிலும்தான் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுவாக குற்றம்சாட்டாமல் மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.

    நோயாளிகளை பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு இடமில்லை என்றால், அரசு மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பிவையுங்கள் என தெரிவித்துள்ளேன். அவசர பிரிவுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். அதிகளவு நோயாளிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகின்றனர். வேறுபாடு பார்ப்பதில்லை. அவர்களுக்கும் பாகுபாடின்றி சிகிச்சை அளித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.

    தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.

    அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.

    இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.

    இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது.
    • கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேசத்தின் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி ரூ. 9 ஆயிரத்து 369 கோடி கடன் உள்ளது.

    மொத்த நிலுவை தொகையில், பெரும்பாலான தொகை வெளிசந்தைக் கடன்கள் மூலம் பெறப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தேதியிட்ட பத்திரங்களை ஏலம் விட்டு மாநில மேம்பாட்டுக்காக திரட்டப்பட்டது.

    ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி, வெளி சந்தை கடன்கள் மூலம் ரூ. 7 ஆயிரத்து 980 கோடி கடன் நிலுவையில் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்கிய தொகை ரூ.594 கோடி, திட்டமில்லாத கடன் ரூ.219 கோடி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் பெற்ற கடன் ரூ. 149 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை உள்ளடக்கம்.

    சட்டத்தின் விதிகளின்படி, வரையறுக்கப்பட்ட வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களுடன் கடன் வரம்பு 25 சதவீதத்தை கடக்கக்கூடாது.

    நடப்பு நிதியாண்டில், நமது கடன் விகிதம் 24.28 சதவீதம் ஆகும். சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை 4-வது இடத்தில் உள்ளது.

    கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது. இப்போது இருப்பில் உள்ள ரூ.618 கோடியை மரபுக் கடனாக திருப்பி செலுத்த வேண்டும். இந்த மொத்த நிலுவையில், ரூ.425 கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்டது.

    இருப்பினும், நிலுவையில் உள்ள கடனைக் காட்டும் புள்ளிவிவரங்கள், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் புதுவை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது.
    • இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடும்ப தலைவிக்கான ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பெண்களின் கையில் பணம் இருந்தால் அது குடும்பத்திற்கு தான் பயன்படும். அதுதான் நம் தேசத்தின் பண்பாடு. அதை உணர்ந்து அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

    பிரதமரின் நிதி ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், இந்தியாவிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது மாநிலத்திற்கு பெருமை. மற்றொரு ஆய்வில் 10-ம் இடத்தில் இருந்த புதுவை ஒரே ஆண்டிற்குள் 6-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முதல் மாநிலமாக புதுவை உள்ளது. இதை நானாக கூறவில்லை. அதிகாரப்பூர்வமான ஆய்வுகள் சொல்கின்றன. அப்படி என்றால் புதுவை நிச்சயமாக முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

    குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை பட்ஜெட்டில் குறிப்பிடாமல் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார் இந்த அரசு அறிவிக்காததை செய்கிறது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை. அதை நம் பார்த்துக்கொண்டுள்ளோம்.

    இந்தியாவிலேயே பெண்களுக்கு உதவித்தொகை கொடுக்கும் முதல் அரசாக புதுவை அரசு விளங்கிக் கொண்டுள்ளது.

    இன்னும் பல திட்டங்கள் மக்களுக்காக வர உள்ளது.

    இவ்வாறு கவர்னர் பேசினார்.

    • அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களைப்போல பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    • அடுத்தகட்டமாக 2-வது கட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலை புதுவை நகர அமைப்பு குழுமம் தயாரித்து வருகிறது.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் பல்வேறு கலைநயம் மிக்க கட்டிடங்கள் உள்ளன.

    இந்த கட்டிடங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக பாரம்பரிய கட்டிங்கள் எவை? என அடையாளம் காணப்பட்டு அவை பட்டியலிடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசு கட்டிடங்கள் 36, பிரெஞ்சு அரசு கட்டிடங்கள் 9, அரவிந்தர் ஆசிரம கட்டிடங்கள் 60, தேவாலயங்கள் 9 என மொத்தம் 114 கட்டிடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் தர கட்டிடங்களில் ஆயி மண்டபம், பழைய துறைமுகம், கோபுரம், கவர்னர் மாளிகை, டூப்ளக்ஸ் சிலை, பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர் ஆசிரமம், துமாஸ் தேவலாயம், குபேர் மார்க்கெட் கடிகார கோபுரம் ஆகியவை அடங்கியுள்ளன.

    புதுவை நகர அமைப்பு குழுமம் இந்த பட்டியலை வெளியிட்டு இதில் பொதுமக்களுக்கு ஆட்சேபனைகள், பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்கும்படி கோரிய பின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இனி இந்த கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதியில்லை. சிறிய சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

    இதன் மூலம் அகமதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களைப்போல பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக 2வது கட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலை புதுவை நகர அமைப்பு குழுமம் தயாரித்து வருகிறது. அரசின் ஒப்புதல் பெற்றவுடன் இந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுகாதாரத்துறையில் ஊழியர்கள் வருகையை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
    • சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள 54 துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

    பணி நேரத்தில் இருக்கையில் இருப்பதில்லை. இதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படை அமைத்து கடந்த மாதம் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. சுகாதாரத்துறையில் ஊழியர்கள் வருகையை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    இதில் 90 சதவீத ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணியில் இருந்தனர். அங்கிருந்த பதிவேட்டை கைப்பற்றிய தனிப்படையினர் பணிக்கு வராதவர்கள் பட்டியலை எடுத்தனர். இதுவரை 25 அரசு துறைகளில் வருகை பதிவை தனிப்படை ஆய்வு செய்து சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
    • இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கி அரசு சார்பு செயலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புதுவை கவர்னர் அனுமதியுடன், அரசு சார்பு செயலர் முத்து மீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் வியாபாரம் எளிதாக நடைபெறவும், சீர்த்திருத்த செயல் திட்டத்தை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை அடையவும், தொழிலாளர் சட்டங்கள் எளிதாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். இந்த அனுமதியானது புதுவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன் விதிகளை சமரசம் செய்யாமல் தரப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

    பெண் ஊழியர்கள் பாதுகாப்பு பணியாளர்கள் ஏதேனும் விடுமுறையில் அல்லது சாதாரண பணி நேரத்திற்கு பிறகு, கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் மீது புதுவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை. குறிப்பாக, பெண் ஊழியர்களிடம் எழுத்துப் பூர்வ ஒப்புதலை பெற்ற பிறகு, அவர்களை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம்.

    பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

    போக்குவரத்து வசதிகள் இருப்பதை குறிக்கும் வகையில், நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    பெண் ஊழியர்களை பணியமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    ×