search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவர் சிலைக்கு மாலை"

    • திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    • மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

    திருச்சி:

    பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 115-வது ஜெயந்தியை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச் சிலைக்கு தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், மண்டல குழு தலைவர்கள் விஜயலெட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாவட்ட பொருளாளர் துரைராஜ்,

    செயற்குழு உறுப்பினர் காஜா மலை விஜய், பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், இளங்கோ, போட்டோ கமால், நாகராஜன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும், மாணவரணிச் செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி பேரூர் கண்ணதாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், கோட்டத் தலைவர் ரவி, துணைத்தலைவர் வில்ஸ் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சரவணசுந்தர், சிவா, உறையூர் எத்திராஜ், உறந்தை செல்வம், பூக்கடை பன்னீர்செல்வம், அண்ணா சிலைவிக்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், மகளிர் அணி ரொகையா, பெல் ராஜமாணிக்கம், மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார், மாவட்டப் பொருளாளர் புலவர் தியாகராசன், அரியமங்கலம் பகுதி செயலர் ஜெயசீலன், துரை வடிவேல், ஆடிட்டர் வினோத், ஆசிரியர் முருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.வி.ஹரிஹரூண் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் குமரேசன் செயலாளர் டோமினிக்செல்வம், பொருளாளர் அழகு முருகன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மனோஜ் குமார், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோரிப்பாளையம் தேவர்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    • முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மதுரை

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா நாளை (30-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை கோரிப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள தேவர் சிலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை காலை 9.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பா ளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    இதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் நாளை காலை 9 மணிக்கு அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் இருந்து கோரிப்பாளையம் புறப்படும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முன்னாள் எம் பி. கோபால கிருஷ்ணன் தலைமையில் திரளானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் வரை வழிநெடுக ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.

    இதையடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று காலை 11 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    அவருடன் முன்னாள் அமைச்ச ர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே. சி. டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இதுகுறித்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒருங்கிணை ப்பாளர்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செ ல்வம், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இன்று இரவு மதுரை வருகிறார். மதுரை அழகர் கோவில் ரோட்டில் உள்ள விடுதியில் தங்கும் அவர் நாளை (30-ந்தேதி) காலை 9 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு வருகிறார். வழிநெடுக அவருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க படுகிறது.

    கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன் செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×