என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேஷியல்"
- கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது.
- தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.
தர்பூசணிகள் ஆக்ஸிஜனேற்றி பண்புகள் மற்றும் வைட்டமின்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளன, அவை நம் சருமத்திற்கு நல்லது. நீங்கள் உங்கள் அன்றாட உணவில் தர்பூசணியைச் சேர்க்க வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. அதன் அற்புதமான நன்மைகளுக்காக உங்கள் சருமத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.
தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிடுகிறது. இது உங்கள் சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. உங்கள் முகத்தில் தர்பூசணி பழத்தை அப்ளை செய்வதால், சரும துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை குறைக்க உதவும். தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை அடிக்கடி செய்து வரலாம். தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.
எந்த பேஷியல் செய்தாலும் முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுவது அவசியம். பின்னர் ஒரு பவுலில் சிறிது தர்பூசணி சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும், இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஒரு பருத்தி பஞ்சு கொண்டு அப்ளை செய்யவும். இதை 5-10 நிமிடங்கள் வைத்து விட்டு உலர்ந்த பின்னர் கழுவவும்.
தர்பூசணி சாறு மற்றும் அரிசிப் பொடியைப் பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப் தயாரிக்கவும். உங்கள் முகத்தை சுமார் 3-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்யவும். எனினும் இது உங்கள் சருமத்தை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் பிரச்சனைகள் நீங்கி விடும்.
உங்கள் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீக்கிய பிறகு, அதை ஈரப்பதமாக்குவது முக்கியம். இதற்கு தர்பூசணி சாறு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து மசாஜ் கிரீம் தயாரிக்கவும். இந்த கிரீமை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இந்த மசாஜ் கிரீம் உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், அழகான பிரகாசத்தை அளிக்கவும் உதவும்.
தர்பூசணி பேஸ் பேக் செய்ய ஒரு பாத்திரத்தில், சிறிது கடலை மாவு, பால் மற்றும் சிறிது தர்பூசணி சாறு எடுத்து ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் இந்த ஃபேஸ் பேக்கை தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.
இது முற்றிலும் இயற்கையானது என்பதால் பொதுவாக எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றாலும், சரும பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க உங்கள் முகத்தில் இதனை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் கையில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
- குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது.
- ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும்.
ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.
க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.
நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும். தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.
மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும். முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும்,
10 நிமிடங்களுக்குப் இந்த இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்