என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எஸ் ஏ சந்திரசேகர்"
- ஜெயவீரன் காமராஜ் 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஜெயவீரன் காமராஜ், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். ஒரு பிலிம் அகாடமியில் சினிமா சார்ந்த படிப்பை முடித்துவிட்டு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் .இவர் மனமெங்கும் அவள் ஞாபகம், அறியாமை ,நீரின்றி அமையாது உலகு போன்ற குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியவர். இவர் தற்போது 'மோகினிப்பட்டி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.
இப்படம் பற்றி இயக்குனர் ஜெயவீரன் காமராஜ் பேசியதாவது, மோகினிப்பட்டி என்பது கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். அந்த ஊரில் ஒரு சாபம் உள்ளது. அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.அதை முன்னிட்டு அவர்களிடம் ஒரு ரகசியக் கட்டுப்பாடு உள்ளது. அதன்படி அங்கு யாரும் காதலித்து திருமணம் செய்ய முடியாது.
இப்படிப்பட்ட சூழலில் அங்கு நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். ஊர்க் கட்டுப்பாடு குறுக்கே நிற்கிறது. அவர்கள் அந்தச் சாபத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அந்த ஊர்ச் சம்பிரதாயத்தை சமாளித்தார்களா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு கதையா என்று நினைக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊருக்குள்ளும் பிறருக்குத் தெரியாத ரகசியங்கள் மறைந்து கொண்டுள்ளன. அப்படி ஒரு ரகசியத்தை வைத்துதான் இப்படி ஒரு படமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்தப் படத்திற்கான கதையை எழுதி அதில் ஒரு பாத்திரத்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் தயக்கமும் எனக்கு இருந்தது. அப்படி ஒரு தயக்கத்தோடு தான் அவரிடம் நான் கதை சொன்னேன். அவர் கதை பிடித்து, அந்தப் பாத்திரமும் பிடித்து ஓகே சொல்லி விட்டார். அவர் இந்தப் படத்திற்கு உள்ளே வந்த பிறகு வேலைகள் மளமளவென ஆரம்பித்தன. ஆனால் அவரை நடிக்க வைக்கும் போது எனக்குப் பதற்றம் இருந்தது.
நாம் உயரத்தில் வைத்து இயக்குனராகப் பார்த்த ஒருவரை வைத்து நாம் எப்படி இயக்குவது என்று தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அதை எல்லாம் சகஜம் ஆக்கிவிட்டு அவர் நடித்துக் கொடுத்துவிட்டார். சில காட்சிகளில் எனக்குத் திருப்தி ஏற்பட்ட போது கூட மேலும் சிறப்பாக அடுத்த ஷாட்டில் நடித்துக் கொடுத்து அந்தப் பாத்திரத்தினை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்று விட்டார் .அந்த வகையில் அவரை நடிக்க வைத்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதன் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைபெற்றது. வெப்மூவிக்கான படைப்பு சுதந்திரத்தோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படம் ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
- நடிகர் விஜய் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
- விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் நேரடியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்- புஸ்சி ஆனந்த்
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தினை வெளியிட்டு 'பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கே வலிமை கூடுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
பிள்ளைகள் ஒன்று சேரும் போது
— S A Chandrasekhar (@Dir_SAC) September 15, 2023
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது.?? pic.twitter.com/OvXS9AZR2J
- ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் நடந்தது. இதில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.
ஆரணியில் சாமி தரிசனம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர் வந்த தகவல் ஆரணி முழுவதும் பரவியதால் விஜய் ரசிகர்கள் கோவில் வளாகம் முன்பு குவிந்தனர். தரிசனம் முடித்து வெளியே வந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அரசியலில் நடிகர்கள் தொடர்ச்சியாக பின்னடைவை சந்திக்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து சென்றார்.
- இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்
தற்போது இவர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால், சரவணன்,ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்
இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து 'என் உயிரை நான் சந்தித்த போது' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
என் உயிரை நான் சந்தித்த போது ?@iVijayakant pic.twitter.com/KZ1bP0yyp0
— S A Chandrasekhar (@Dir_SAC) January 31, 2023
- இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் தற்போது 'நான் கடவுள் இல்லை' படத்தை இயக்கி வருகிறார்.
- இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
எஸ்.ஏ.சந்திர சேகர்
தற்போது இவர் இயக்கத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இமயமலையில் மோட்டார் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய்யை விட மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
#Himalayas pic.twitter.com/tSay0qk3w5
— S A Chandrasekhar (@Dir_SAC) November 1, 2022
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்