என் மலர்
நீங்கள் தேடியது "அந்தமான் விமானங்கள்"
- சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் வருகிற 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும்.
இந்தநிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும், மேலும் அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாலும் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் வருகிற 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.
இதையடுத்து அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல், அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை, விமான நிறுவனங்கள் செய்து உள்ளன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்தமானில் தற்போது மோசமான வானிலை நிலவிக் கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் சென்னையில் இருந்து, அந்தமான் செல்லும் விமானங்கள், அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விமான நிறுவனத்துக்கு அதிகமான நஷ்டங்கள் ஏற்படுவதோடு, பயணிகளுக்கும் விமான நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே தான் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.