என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்"

    • வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
    • நாளை இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    ஆண்டுக்கொரு முறை கார்த்திகை மாத பவுர்ணமியை யொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.

    அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது தங்க முலாம் பூசிய நாக கவசம் திறக்கப்பட்டது. தொடர்ந்து புனுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறநிலைய துறை உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும். பின்னர் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.

    ×