என் மலர்
நீங்கள் தேடியது "மகாவிஷ்ணு"
- அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.
- காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி.
காம என்றால் அன்பு, கருணை. அக்ஷ என்றால் கண். எனவே, காமாக்ஷி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.
காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்
அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோவில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றது.
முக்தியை அளித்திடும் தெய்வத் திருத்தலங்கள் ஏழு. அவை, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, பூரி, துவாரகை என்பவையாகும்.
காஞ்சிபுரத் திருத்தலத்துக்கு காஞ்சிபுரம், பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், மும்மூர்த்தி வாசம், பிரமபுரம், காமபீடம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்பீரபுரம், தண்டகபுரம், காஞ்சினபுரம், கச்சி, சத்தியவிரதரேத்திரம் என்னும் பதினைந்து திருநாமங்கள் உண்டு.
இத்திருத்தலத்தில் முற்காலத்தில் சண்பக மரங்கள் நிறைந்திருந்ததால், சண்பகாரண்யம் என்னும் திருப்பெயரும் உண்டு.
காஞ்சிபுரத்தில் நூற்றிஎட்டுச் சிவத்திருத்தலங்களும், பதினெட்டு வைணவத் திருத்தலங்களும் அமைந்துள்ளன.
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லக்ஷ்மி) தன் இரு கண்களாகக் கொண்டவள்.
இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.
பந்தகாசுரன்
முன்னொரு காலத்திலே, பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் (= அரக்கன்) வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.
பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.
பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், "அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது" என்று கூறி, அவர்களை பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.
அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானை குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள்.
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டு தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.
அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள்.
அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.
சிறு பெண்ணின் உருவத்தில்
உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.
அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.
அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள்.
அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள். அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள்.
தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறி போர் புரிந்தது. இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது.
அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்கு சிவபெருமானை அழைத்தார். சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன.
இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.
அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுரனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள்.
அன்னை காமாட்சி தேவி
ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள். அந்த நன்னாள், ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும்.
எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள். அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.
அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் உய்ய அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள்.
அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அமைந்த அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.
தற்போது, அன்னை காமாட்சி திருக்கோவில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.
- விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும்.
- எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.
விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது.
சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திருமார் கணநாதன் செம்மை படரொளியோ
கந்த வேளடும் கருத்துக்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு
திருவிளக்கின் சுடரே-சிவபெருமான். சுடரிலுள்ள வெப்பம் பராசக்தி. சுடரின் செந்நிறத்தில் கணநாதனாம் கணபதியும் ஒளியிலே கந்தவேளும் இருப்பதாக தெய்வ நூல்கள் கூறுகின்றன.
விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்.
இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன. ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள்.
விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும். விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன. எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.
சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்களையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும்.
கணவன்-மனைவியரிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெயால் விளக்கேற்ற வேண்டும்.
தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.
குடும்ப நலனுக்காகவும் உறவினரின் நலனுக்காகவும் விளக்கேற்றி பூஜிக்கும் பொழுது அதற்குரிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதைப்போல விளக்கில் போடப்படும் திரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும், எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.
பொதுவாக பஞ்சுத் திரியே விளக்கேற்றத் தகுந்தது. பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்லவையெல்லாம் பெறலாம். வாழைத்தண்டிலிருந்து நார் எடுத்து திரித்து காயவைத்து விளக்கேற்றலாம். இத்தகைய திரியைப் பயன்படுத்தி தெய்வ குற்றத்திலிருந்து விடுபடலாம்.
இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளெருக்கின் இலைப் பட்டையினால் திரி செய்து அதனால் விளக்கேற்றலாம். இதுபோல தாமரைத் தண்டிலிருந்து பிரித்தெடுத்த நூலால் திரிசெய்து போட்டு தீபமேற்றினால் செல்வம் நிலைப்பதுடன், செய்த பாவங்களும் அகலும்.
புதிதாக மஞ்சள் வண்ணத் துணி வாங்கி, அதில் திரி செய்து போட்டு தீபம் ஏற்றலாம். இதனால் அம்பாளின் பேரருள் கிடைக்கும். மேலும் நோய்களை அகற்ற வல்லது. சிவப்புத் துணியினால் திரி செய்து போட்டால், திருமண யோகம் கிட்டும். புத்திர பாக்கியமும் ஏற்படும்.
'தீப மங்கள ஜோதி நமோநம' என்று விளக்கினை வழிபட்டவர் அருணகிரிநாதர். மங்கலங்களை அருளவல்ல தீபத்தை நாம் எந்த திசையில் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குரிய பலன்களை நாம் அடைவோம்.
தென்திசை தவிர ஏனைய மூன்று திசைகளை நோக்கி தீபச்சுடர் இருக்குமாறு ஏற்றலாம். வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள், துன்பங்கள் இருந்தால் கிழக்கு நோக்கி ஏற்றி வழிபட்டு வந்தால் அவை விலகி விடும்.
தடைகளை விலக்க நினைப்பவர்கள் வடதிசைநோக்கி விளக்கு ஏற்றி வழிபடலாம். கல்விக்கு ஏற்படும் தடைகள், திருமணத்தடை போன்ற தடைகள் விலகி, எல்லா நலன்களையும் பெறலாம்.
பகை அகல வேண்டும், கடன் தொல்லை நீங்க வேண்டும், அமைதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கு திசை நோக்கி விளக்கின் சுடர் இருக்குமாறு ஏற்றி பூஜிக்கலாம். குத்துவிளக்கில் ஐந்து முகங்களிலும் திரியிட்டு விளக்கேற்றுவதால் புத்திர பாக்கியம் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவவேண்டுமென்று விரும்பும் பெண்கள் விளக்கின் இரண்டு முகங்களில் திரியிட்டு ஏற்ற வேண்டும்.
சகல சவுபாக்கியங்களையும் அளித்திடும் திருவிளக்கு பூஜையை; அதற்குரிய நியமத்துடன் செய்ய வேண்டியது அவசியம்.
திருவிளக்கை, புளி, எலுமிச்சம்பழம், அரப்பு, சாம்பல் இவற்றைப் பயன்படுத்தி விளக்க வேண்டும். ரசாயனம் கலந்த பொடிகளைப் பயன்படுத்தக்கூடாது. பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.
மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம். திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும். உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள். அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.
விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது. இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.
பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரட்டையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம். விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.
திருவிளக்கிலே தேவியே உறைகின்றாள். விளக்கை வழிபடுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம். அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப் பெற திருவிளக்கு பூஜை எளிமையானது.
திருவிளக்கை அணைக்கும்பொழுது ஒரு துளிபாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம். குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.
- ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.
- வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும்.
பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருளை பெற்ற மதுகைடவர்கள் எனும் அரக்கர்கள் இரண்டுபேர், தாம்பெற்ற வைகுண்ட சுகத்தை உலகில் இருக்கும் அனைவரும் பெறவேண்டும் என விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்க வடக்குவாசல் வழியாக தாங்கள்அர்ச்சாவதாரத்தில் வெளியே வரும்போது தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின் தொடர்ந்து வருபவர் களுக்கும் அவர்கள் எத்தகைய பாவங்களை செய்திருந்தாலும் அவர்களுக்கு முக்தி தந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பெருமாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். எனவே தான் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கபட்டு சாமி பவனிவரும் நிகழ்ச்சி உருவானது.
பகல்பத்து - இராபத்து
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் தலங் களில் 21 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்கள் இராபத்து என்றும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று செய்யக்கூடாதது
ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான்.
ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
கோவிலில் வழிபடுவது எப்படி?
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.
வீட்டில் வழிபடுவது எப்படி?
திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.
அன்று, பசுக்களுக்கு அகத்திக்கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கி செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
- ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
- ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
1. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
2. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.
3. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
4. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
5. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.
6. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை "ஆதிமூலமே" என்று கதற
உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார்.
இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும்
"கஜேந்திர மோட்ச வைபவம்" நடத்தப்படுகிறது.
7. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
8. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது.
9. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
10. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
11. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
12. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.
13. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.
14. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து,
உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
15. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள்.
அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும்.
இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள்.
அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
16. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால்
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.
17. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து,
சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு
சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும்.
வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
18. ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர்.
அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
19. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து,
கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து,
மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
20. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும்.
இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள்
அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
- கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
- ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.
கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்,
ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர்.
துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால்,
கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும்.
- அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
- இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்
நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.
அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.
இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று
விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
- தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.
- இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.
தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.
இந்த மலை அடிவாரத்தில் ஆதி மூலமான மகா விஷ்ணு குடி கொண்டிருந்தார்.
அவர் குடி கொண்டிருந்த இடம் அழகான மிக நெருக்கமான பூக்கள் நிறைந்த இடம்.
எனவே அந்த இடத்தினை மொய்மாம் பூம்பொழில் என்று அழைத்தனர்.
பாண்டிய மன்னன் இந்திர துய்மன் பெருமானின் பக்தன்.
இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.
அங்கு வந்து தினமும் தன்னை மறந்து வணங்கி நின்றான்.
இவனின் பக்தியை கேள்விப்பட்டார் அகத்திய மாமுனிவர்.
தான் வாழ்ந்த பொதிகை மலையை விட்டு மொய்மாம் பூம்பொழில் நோக்கி வந்தார்.
அந்த மகாபக்தனை பார்த்து அவனுக்கு பாராட்டு தெரிவிக்க வந்த மாமுனிக்கு அவனை பார்த்தவுடன் கோபம் வந்தது.
முனிவர் வந்தது கூட தெரியாமல் பாண்டிய மன்னன் பக்தியில் தன்னை மறந்த நிலையில் பெருமாளுடன் ஐக்கியமாகி இருந்தார்.
இதைக்கண்டு வெகுண்டமுனிவர் தான் நேரில் வந்தும் கூட இந்த மன்னன் அகந்தையால் தன்னை மதிக்கவில்லையே என கோபம் கொண்டார்.
நீ யானையாக போக கடவது என்று பாண்டிய மன்னனை நோக்கி சபித்தார்.
மறுநிடமே அரசன் யானையாக மாறிவிட்டார்.
அகத்தியர் அதன்பின் தன் யோக நெறியால் நினைத்துப் பார்த்தபோது மன்னனின் தவறு இல்லாத நிலையை உணர்ந்தார்.
அரசன் மீது கருணை கொண்டு கஜேந்திரா என்று அழைத்து ஆசி கூறினார்.
இதற்கிடையில் தாமிரபரணி நதியில் மேலே நின்று தவம் செய்துகொண்டிருந்தார்.
தேவலன் என்ற முனிவர்.
இவரை வான் வழி சென்ற கந்தர்வன் என்பவன் விளையாட்டாய் பார்த்து சிரித்தான்.
அவரை கேலி செய்யும் பொருட்டு ஆற்று நீர் வழியாக முனிவரின் காலை பிடித்து இழுத்து விளையாடினான்.
இதனால் மிரண்டு போன முனிவர் அவன் மீது கோபம் கொண்டார்.
கந்தர்வனை முதலையாக போவது என்று சபித்தார்.
அந்த சபிக்கப்பட்ட கந்தர்வன் முதலை மொய்மாம் பூம்பொழிலில் வாழ்ந்து வந்தது.
கஜேந்திரன் யானையாக இருந்தாலும் பல ஆண்டுகளாக சாபத்தினால் யானை கூட்டத்தோடு கூட்டமாக அரசனாக வாழ்த்து வந்தார்.
ஆனாலும் தினமும் பகவானை பூஜை செய்ய மட்டும் தவறுவதில்லை.
ஒரு நாள் பொழிந்த நாதரை வழிபட தாமரை மலரை பறிக்க பூம்பொழினுள் யானை இறங்கும் போது
அங்கு முதலையாய் வாழ்ந்து வந்த கந்தர்வன் கஜேந்திரன் காலை பற்றினான்.
உயிர் போகும் நிலையில் கதறினார் யானை உருவத்தில் இருந்த அரசன்.
அப்போது அவருக்கு முற்பிறவி நினைவுக்கு வந்தது.
தன்னிலை உணர்ந்து ஆதி மூலத்திடம் உதவி கேட்டார்.
இவரின் அபயக்குரல் மகாவிஷ்ணுவின் காதுக்கு கேட்டது.
உடனே மகாவிஷ்ணு கருடன் மீதேறி தனது சக்கரத்தை ஏவினார்.
பின் அவர்தாமிரபரணி நதியில் திருவலஞ்சுழியில் வந்து இறங்கினார்.
பின்பு அங்கு கோவில் கொண்டுள்ள சிவ பெருமானின் அருள் பெற்று, யானையின் காலை பிடித்த முதலையை சக்கரம் மூலம் தலையறுத்தார்.
இதனால் கந்தர்வனுக்கு சாப விமோசனம் அளித்தார்.
அதன் பின்பு யானையான கஜேந்திரனை தன் கரத்தால் தூக்கி விட்டார்.
பகவான் கரம் பட்டதும் கஜேந்திரன் அஞ்ஞான பந்தம் அகன்று மகாவிஷ்ணு மூலம் பழைய உருவமான அரசன் ஆனான்.
கஜேந்திரனான அத்தியை (யானையை) பகவான் ஆட்கொண்டதால் இவ்வூருக்கு அத்தி+யாள+நல்லூர் என்று பெயர் பெற்றது.
அதுவே மருவி அத்தாளநல்லூர் ஆனது.
இங்கு கஜேந்திர வரதன் என்ற திருநாமத்துடன் ஆதிமூலம் திருக்கோவில் கொண்டுள்ளார்.
புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவை நடைபெறும்.
பக்தர்கள் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை இந்த கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து வேண்டும் வரம் பெற்று பலன் பெறுகிறார்கள்.
இந்த கோவில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணி வரை.
இந்த கோவிலுக்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்தும், சேரன் மகாதேவி மற்றும்
நெல்லை சந்திப்பில் இருந்தும் டவுண் பஸ் வசதி உள்ளது.
இல்லையென்றால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துகளில்
நாகர்கோவில் வள்ளியூர் பாபநாசம் தென்காசி செல்லும் பேருந்துகளிலும் சேரன் மகாதேவி
அல்லது வீரவநல்லூரில் இறங்கி வந்து அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.
முக்கூடல் வந்தால் கூட ஆட்டோவில் செல்லலாம்.
- விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் “பெரிய திருவடி” என்று அழைக்கப்படுகிறார்.
- கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன்.
மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் "பெரிய திருவடி" என்று அழைக்கப்படுகிறார்.
இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.
ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார்.
இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.
பெருமாள் கோவில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம் பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, "வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்" என்று வரமளித்தார்.
கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன்.
வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
- தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும்.
- இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள்.
தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும்.
இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள்.
வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான விஷ்ணு உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள்.
அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன.
தசம் என்றால் பத்து என்று பொருள்.
மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.
- மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும்.
- மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும்.
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன:
மச்ச அவதாரம்
மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும்.
மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும்.
இந்த அவதாரத்தில், விஷ்ணு நான்கு கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.
பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு.
அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது.
பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
- கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின் படி, விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும்.
- எனவே நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது.
கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின் படி, விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும்.
இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார்.
இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.
பரிணாம வளர்ச்சியில் நீர் வாழும் உயிரினம் நீர், நிலம் இரண்டிலும் வாழும் உயிரினமாக மாற்றம் அடையும் என்று உள்ளது.
எனவே நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது.
பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடையும் போது மேரு மலையைத் தாங்கி நிறுத்த திருமால் இந்த கூர்மாவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.
- வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
- இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.
பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை நிலத்தில் வாழ்பவையாக ஒரு காலக் கட்டத்தில் இருந்தவை முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள்.
அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன.