என் மலர்
நீங்கள் தேடியது "என்னை மாற்றும் காதலே"
- இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் 'என்னை மாற்றும் காதலே' திரைப்படம் உருவாகி வருகிறது.
- இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் சலபத்தி புவ்வாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'என்னை மாற்றும் காதலே'. இந்த படத்தில் விஷ்வா புதுமுக நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஹரிதிகா சீனிவாஸ் நடித்திருக்கிறார். மேலும், கே.பாக்யராஜ், ஆம்னி, ஜெயப்பிரகாஷ், அலி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கே. பாக்யராஜ்
என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் கே. பாக்யராஜ் கூறியதாவது, "எதைப் பாத்தாலும் ரெட் ஜெயண்ட். அதை தவிர வேறு யாரும் கிடையாது. எல்லா படமும் அவர்கள் தான் வளைச்சிப் போடுகிறார்கள். அப்படி கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் ரெட் ஜெயண்ட் பெயரை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனக்கு தெரிந்து அதுதான் உண்மை.
என்னிடம் பல பேர் வந்து ரெட் ஜெயண்ட் உதயநிதி சாரை படம் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். அந்த பேனர் இருந்தாலே படத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் கூட்டம் வந்துவிடும். படம் நல்லபடியா வந்து விடும். அந்த ஒரு நம்பிக்கையோட எல்லாரும் அவர்களிடம் வரிசையில் நிற்கிறார்கள்" என்று கூறினார்.