என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடகளபோட்டி"
- தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
- தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
திருப்பூர்:
தெலுங்கானா மாநிலத்தில் 34-வது தென் மண்டல அளவிலான ஜூனியா் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தென் மண்டலங்களைச் சோ்ந்த ஆந்திரம், கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
இதில் 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வீரா்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 போ் பங்கேற்றனா். இதில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனா். மேலும் சிறந்த தடகள வீரா்களாகவும் தோ்ந்தெடுக்க ப்பட்டனா்.
இதில் தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், அனைத்துப் பிரிவிலும் சிறந்த வீரா், வீராங்கனை பட்டமும் வென்றுள்ளனா்.
போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூா் மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு, திருப்பூா் தடகள சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் முத்துகுமாா், மூத்த துணைத் தலைவா் மோகன் காா்த்திக், துணைத் தலைவா்கள் வெங்கடேஷ், சந்தீப்குமாா், ஜெயபிரகாஷ், மதிவாணன், இணைச் செயலாளா்கள் நிரஞ்சன், அழகேசன், ராமகிருஷ்ணன், தொழில்நுட்பக்குழுத் தலைவா் மனோகா் செந்தூா்பாண்டி, துணைத் தலைவா் சஜீவ் தாமஸ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்
- இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடை பெறும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- 12 வயதுக்குட்பட்டோர்களுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் மட்டும் நடைபெறும். அவர்களுக்கு மாநில போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் வருகிற 27-ந் தேதி மாவட்ட இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க தலைவர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகிற 27-ந் தேதி (ஞாயி ற்றுக்கிழமை) மாவட்ட இளையோர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். இதில் 20, 18, 16, 14 மற்றும் 12 வயதிற்குட்பட்டோர் என 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறும்.
20 வயதுக்குட்பட்டோர் 12.11.2003 முதல் 11.11.2005 வரை பிறந்தவராகவும், 18 வயதுக்குட்பட்டோர் 12.11.2007 முதல் 11.11.2009 வரை பிறந்தவராகவும், 16 வயதுக்குட்பட்டோர் 12.11.2009 முதல் 11.11.2011 வரை பிறந்தவராகவும், 12 வயதுக்குட்பட்டோர் 12.11.2011 முதுல் 11.11.2013 வரை பிறந்தவராக இருக்க வேண்டும்.
இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடை பெறும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
12 வயதுக்குட்பட்டோர்களுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் மட்டும் நடைபெறும். அவர்களுக்கு மாநில போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
ஒரு வீரர் இரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 22-ந் தேதியாகும். முன்பதிவு படிவங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒருவர் ஒரு போட்டியில் கலந்து கொள்ள கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறபபட்டுள்ளது.
- தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
- அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி கடந்த 11ந்தேதி துவங்கி ஒரு வாரமாக நடந்து வருகிறது. குழு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் தனிநபருக்கு தடகள போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முன்னதாக சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், முதல் மண்டல தலைவர் உமா மகேஷ்வரி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுப்பிரிவினர், அரசு ஊழியர் என 4பிரிவினருக்கு ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவில் 876 பேர், கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில், 250 பேர், அரசு ஊழியர் பிரிவில் 263 பேர், பொதுப்பிரிவில் 132 பேர் என மொத்தம் 1,521 பேர் தடகள போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் தடகள போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
போட்டியை துவக்கி வைக்க வந்த திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மைதானத்தில் களமிறங்கி குண்டு எறியும் இடத்துக்கு வந்தார். வட்டத்துக்குள் நின்று குண்டை தோளில் வைத்து எறிந்தார். சிறிதுதூரம் சென்று குண்டு விழுந்தது.
- தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.
- பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.
பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.
இதேப்போல் 10-ம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், 9- வகுப்பு மாணவி நீவிகா தடை தாண்டும் ஓட்டம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.
இதில் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற ஆர்த்தி வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப. கார்த்திகேயன், ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன் மற்றும் பயிற்சியாளர் விக்னேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்