என் மலர்
நீங்கள் தேடியது "பிஎம்வி எலெக்ட்ரிக்"
- இந்திய எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் நாட்டின் மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.
- புதிய PMV எலெக்ட்ரிக் கார் மூன்று வித ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மும்பையை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. Eas-E பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் PMV (பெர்சனல் மொபிலிட்டி வெஹிகில்) எனும் புதிய பிரிவை உருவாக்கி இருக்கிறது. புதிய PMV Eas-E மாடல் இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
புதிய PMV Eas-E மாடலின் அறிமுக விலை ரூ. 4 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய Eas-E மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் ஆகும். PMV Eas-E விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்க இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டு இருப்பதாக PMV எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது.

PMV Eas-E மாடலில் 48 வோல்ட் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 50 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது முழு சார்ஜ் செய்தால் 120, 160 மற்றும் 200 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் வகையில் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த காரின் அதிகபட்சம் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த காரை 15A சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். 2915mm நீளமாக இருக்கும் PMV Eas-E மாடலில் ஓட்டுனர் சேர்த்து இருவர் பயணம் செய்ய முடியும்.
தோற்றத்தில் PMS Eas-E முன்புறம் எல்இடி லைட் ஸ்ட்ரிப், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது. பின்புறத்தில் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 4ஜி கனெக்டிவிட்டி, பல்வேறு டிரைவிங் மோட்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், குரூயிஸ் கண்ட்ரோல், ஏசி, பவர் விண்டோ, கீலெஸ் எண்ட்ரி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஆன்போர்டு நேவிகேஷன், ரியர் கேமரா, முன்புறம் டிஸ்க் பிரேக், ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.