என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதன் கார்க்கி"
- கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
- கங்குவா படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கங்குவா." ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், கங்குவா படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து படக்குழு மூலம் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி கங்குவா படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "கங்குவா திரைப்படத்தை முழுமையாக பார்த்தேன். டப்பிங் செய்யும் போது நூற்றுக்கும் அதிக முறை பார்த்த விட்டேன், இருந்தும் திரைப்படத்தின் தாக்கம் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிகரிக்கிறது. காட்சிகளில் பிரமாண்டம், மிக நுனுக்கமான கலை, ஆழமான கதை மற்றும் இசையின் அற்புதம் இவற்றுடன் சூர்யாவின் நடிப்பு, இதுவரை உருவாக்கியதில் மிக சிறப்பான படைப்பாக மாற்றுகிறது."
"இயக்குநர் சிறுத்தை சிவா உருவாக்கி இருக்கும் மிரட்டலான அனுபவத்திற்கு மனமார்ந்த நன்றிகள். இவரின் கனவுகளை நனவாக்கிய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மதன் கார்க்கி ‘முடிவிலி’ என்னும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
- முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.
பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது 'முடிவிலி' என்னும் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது பற்றி மதன் கார்க்கி கூறியதாவது:-
நான் உருவாக்கியுள்ள முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடலை பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
வருகிற 26-ந் தேதி ஸ்பார்ட்டி பைவ் மற்றும் சில வலைதளங்களில் இந்த இசை ஆல்பம் வெளியாகிறது. என் தந்தை வைரமுத்து ஆல்பத்தை கேட்டு விட்டு நன்றாக பாராட்டினார்.
மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருப்பது பற்றி வியந்து கேட்டார்.
ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் ஆபத்து கிடையாது. கிராம போன் வரும்போது பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
எதிர்ப்புகளை மீறி கிராமபோன் அறிமுகமானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் அதில் பண்ணி விட முடியாது. அதற்கும் மனிதன் தேவைப்படுகிறான்.
மனிதனின் கட்டளைப்படி தான் ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் எதையும் உருவாக்க முடியும். புதிதாக அனிமேஷன் கிராபிக்ஸ் பணிகளுக்கு அடையாறில் 'பா' என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கியுள்ளேன்.
திரைப்படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் இங்கு நடைபெறுகிறது. புராண கதையில் இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன். படத்தில் சூர்யா, ஜான்வி கபூர் இணைந்து நடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டான்ஸை வைத்து உருவாகியுள்ள வெப் தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'.
- இந்த வெப் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
விஜய், பிரசன்னா ஜே.கே, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் 'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்'. நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு உருவாகிவுள்ள இந்த வெப் தொடரில் தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்
'ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்' வெப் தொடர் நவம்பர் 18-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது, " டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை, ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று பேசினார்.
மேலும், நடிகர் ஜீவா பேசியதாவது, "ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்