என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கஜ் திரிபாதி"

    • பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
    • இப்படத்தில் வாஜ்பாய் கதாப்பாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடிக்கவுள்ளார்.

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    பங்கஜ் திரிபாதி

    பங்கஜ் திரிபாதி

     

    இந்தப் படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியதாவது, "இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறியுள்ளார்.

    இப்படம் அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன
    • இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.

    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில், படத்தில் பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 'தக் லைஃப்' படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் வெளிவந்தது மிர்சாபூர் வெப் தொடர்.
    • வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாக உள்ளது.

    2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப் தொடரான 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து

    2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்று அடுத்த பாகத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    பாலிவுட் வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. இந்நிலையில்  டிரைலர் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சீசன் 3 மீது ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×