search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு திருவிழா"

    • மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும் வழிபாடு நடந்தது.
    • அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில்.

    இந்த மாரியம்மனை திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒரு மடம் அமைத்து அதில் இந்த மாரியம்மனை வைத்து வழிபாடு செய்ததாக வரலாறு.

    அதனால் இந்த மாரியம்மனுக்கு நாட்டு மடம் மாரியம்மன் என பெயர்.

    இந்த மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும், ஞாயிறு, வெ்ளளி, செவ்வாய் கிழமைகளில் வழிபாடும் நடைபெறும்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 29-ந்தேதி அன்று தொடங்கியது.

    இதையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வந்தடைந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நான்காம் நாள் மண்டகபடியான திங்கள் கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வண்ண மலர்களால், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதியுலா காட்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை வழிபட்டனர்.

    பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடு களை அர்ச்சரக்கட்டளை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
    • தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடு துறை மறைவட்ட அதிபர் பேரருட் தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் கொடி பவனியை வழிநடத்தினார்.

    வேளாங்கண்ணி திருத்தல பேராலய அதிபர் பேரருட் இருதயராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்புதிருப்பலி நடை பெற்றது. அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற முதல் நாள் திருவிழா திருப்பலியை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, புனித பவுல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர், பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.

    இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    இதில் அருட்தந்தை யர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற் குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகி ன்றன.

    வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.

    டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவு ள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மறை வட்ட அதிபர் பங்குத்தந்தை பேரருட் தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்கு ழுவினர் மற்றும்பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×