என் மலர்
நீங்கள் தேடியது "லக்ஷ்மி"
- சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை லக்ஷ்மி.
- இவர் இறந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு ஆடியோ பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தேடி வந்த லக்ஷ்மி, சில நேரங்களில் சில மனிதர்கள், சீர்வரிசை, உனக்காக நான், தென்பாண்டி தமிழே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை லக்ஷ்மி. இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்திலும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் குணச்சித்திர படங்கள் ஏற்று நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

லக்ஷ்மி
இந்நிலையில் நடிகை லக்ஷ்மி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக லக்ஷ்மி ஆடியோ ஒன்றை வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். அதில், "நான் ரொம்ப நல்லாவே இருக்கேன். பிறந்து விட்டால் என்றாவது ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது.

லக்ஷ்மி
யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை கிளப்பி விட்டது எனத் தெரியவில்லை. எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறிப்போய் போன் போட்டு காலையிலிருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும், திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். என் மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும்போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.